உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல்-கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல்-கொய்தா பெயரில் வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல் கொய்தா பெயரில், இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பீஹாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்னாவில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அல்கொய்தா பெயரில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புரளி என உறுதி!

போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். இதில், இ-மெயில் மிரட்டல், வெறும் புரளி என்று தெரியவந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கும்…!

முன்னதாக, பாட்னா விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க, போலீசார் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஆக 04, 2024 16:05

அந்தக் கட்டிடத்துக்கு குண்டு எல்லாம் தேவை.இல்லை. அடுத்த மழைக்கு அதுவே இடிஞ்சி விழுந்துரும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 10:53

நிதிஷ் பாஜகவை தாங்கிப்பிடிக்கிறது யாருக்கோ பொசபொச ன்னு வந்திருக்கு ........


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை