உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பம்பை - சன்னிதானம் கேபிள் கார் வசதி வேகம்

பம்பை - சன்னிதானம் கேபிள் கார் வசதி வேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: “இந்த ஆண்டு சபரிமலை மண்டல,- மகர விளக்கு காலத்தில் தினமும், 80,000 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்,” என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் கூறினார்.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் 15-ல் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு சீசன் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.கூட்டத்துக்கு பின், அமைச்சர் வாசவன் கூறியதாவது: கடந்த சீசனில், 52 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு அதைவிட கூடுதல் பக்தர்கள் வருவர் என்று கருதுகிறோம். ஆடி மாதத்தில் எதிர்பார்த்ததை விட, அதிக பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.இந்த சீசனில், ஆன்லைன் வாயிலாக தினமும் 80,000 பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.தற்போது நிலக்கல்லில் 8,000 வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இது 10,000 ஆக உயர்த்தப்படும். எரிமேலியில், 1,100 வாகனங்கள் நிறுத்தும் வசதியை 2,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.விபத்தில் காயமடையும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் செய்யப்படும்.சன்னிதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். வனவிலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.பம்பையிலும், சன்னிதானத்திலும் மழை, வெயிலால் பக்தர்கள் அவதிப்படாமல் இருக்க கூரைகள் அமைக்கப்படும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MANIKANDAN
ஜூலை 26, 2024 11:49

போன சீரான கழிப்பிட வசதி இல்லை. ஒருவேளை நீண்ட வரிசை இருந்தால் அங்கு பக்தர்களுக்கு நீர் கூட கிடைக்காது. ஒருசமயம் மழை பெய்தால் ஒதுங்ககூட இடம் கிடைக்காது. கேபிள் கார் வசதி, ஏர்போர்ட், ஹெலிபேட் எல்லாம் ரொம்ப முக்கியம். நீலக்கல் டு பம்பா பஸ் கொள்ளை வேறு. சபரி மலை ஒரு சுற்றுலா தளம் ஆகி நல்ல பணம் சம்பாதிக்கணும்.


rajasekar v
ஜூலை 26, 2024 10:34

Very good initiative of cable car arrangement from Pambai to Sannidhanam. It will be very useful to Pilgrims


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி