உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள்? சுதந்திர தினத்தை சீர்குலைக்க உல்பா சதி

அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள்? சுதந்திர தினத்தை சீர்குலைக்க உல்பா சதி

குவஹாத்தி, : சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, 'உல்பா' பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால் பீதி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.நாடு முழுதும் நேற்று சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு மாநிலமான அசாமில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான உல்பா பயங்கரவாத அமைப்பு, பல்வேறு ஊடகங்களுக்கு மிரட்டல் இ - மெயில் அனுப்பி இருந்தது.

மிரட்டல்

அதில், 'அசாமின் குவஹாத்தி உட்பட 24 இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தோம். தொழில்நுட்ப கோளாறால் அவை வெடிக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை தொடர்ந்து, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த இடங்களுக்கு பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் வெடிகுண்டுகளோ, வெடிமருந்தோ கைப்பற்றப்படவில்லை.இந்நிலையில், நாகோவுன், லட்சுமிபூர், சிவசாகர் பகுதிகளை சேர்ந்த போலீசார், உல்பா பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்த சில இடங்களில் இருந்து வெடிபொருள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

தீவிர சோதனை

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதிகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக பயங்கரவாதிகள் குறிப்பிட்டிருந்தனர். அங்கும் தீவிர சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 16, 2024 06:09

எல்லையில் வேலி போர்க்கால அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். இல்லை என்றால் கட்டுப்படுத்துவது சிரமம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை