உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜீவனாம்சம் தொடர்பான உச்ச நீதிமன்ற செய்திக்கான பாக்ஸ்

ஜீவனாம்சம் தொடர்பான உச்ச நீதிமன்ற செய்திக்கான பாக்ஸ்

மனைவியை கவனியுங்க!

தன் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, குடும்பத் தலைவிகள் குறித்து குறிப்பிட்டு உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:விவாகரத்து வழக்கில் தன் செலவுகளை கவனித்துக் கொள்வதற்கு, அவருடைய கணவராக இருந்தவர் ஜீவனாம்சம் தர வேண்டும். இதில் சில முக்கிய விஷயங்கள் நாம் கவனிக்க வேண்டும்.சேர்ந்து வாழும் குடும்பங்களில், வேலைக்கு செல்லும் பெண்கள், தங்களுடைய செலவுக்கு கணவரையோ, குடும்பத்தையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதே நேரத்தில், வேலைக்குச் செல்லாத, குடும்பத் தலைவி என்று அழைக்கப்படும் குடும்பத்துக்காகவே உழைக்கும் பெண்களின் சொந்த செலவை யார் கவனிப்பர்? பெரும்பாலான பெண்கள், கணவர் கொடுக்கும் பணத்தில் சிறிதளவு சேமிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வர். அதையும் குடும்பத்துக்காகவே செலவிடுவர். தனக்கென எந்தச் செலவையும் செய்ய மாட்டர்.அதே நேரத்தில், குடும்பத்துக்கான செலவைத் தவிர, தன் சொந்த தேவைக்காக செலவு செய்யும் அளவுக்கு பெண்களுக்கு நிதி அதிகாரத்தை கணவர்கள் வழங்க வேண்டும். இந்த வழக்கு அதை உணர்த்துகிறது. குடும்பத் தலைவிக்கும் சில ஆசைகள் இருக்கும். ஆனால், குடும்பத்துக்காக அதை சொல்லாமல் மறைத்துவிடுவார்கள்.தன் வாழ்நாள் முழுதும் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு, அவர்களுடைய சிறிய சிறிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை கணவன் மற்றும் குடும்பத்தார் ஏற்படுத்தி தர வேண்டும்.இதை வேலை பார்க்கும் அனைத்து ஆண்களும் உணர வேண்டும். தங்களுடைய நிதி ஆதாரங்களில், மனைவிக்கும் பங்கு தர வேண்டும். குறிப்பாக, இருவர் பெயரிடும் கூட்டு வங்கிக் கணக்கு, டெபிட் கார்டை பகிர்ந்து கொள்வது என, தன் நிதி ஆதாரங்களில், மனைவியும் பங்கேற்கும் வாய்ப்பை கணவர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ