உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் வழக்கு இதுவரை நடந்தவை

பிரஜ்வல் வழக்கு இதுவரை நடந்தவை

ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியான பின் கடந்த ஒரு மாதத்தில் நடந்த நிகழ்வுகள்:l ஏப்ரல் 24: கர்நாடக மாநிலம், ஹாசனில் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பெண்களை மிரட்டி பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினl ஏப்ரல் 26-: முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிரஜ்வல் உடனடியாக நாட்டை விட்டு தப்பி ஓட்டம். அவர் ஜெர்மனிக்கு சென்றதாக கூறப்பட்டதுl ஏப்ரல் 27: பிரஜ்வல் வழக்கை விசாரிக்க எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைக்கும் என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இந்த விவகாரத்தில் அரசுக்கு, மாநில மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதினார்l ஏப்ரல் 30: கட்சியில் இருந்து பிரஜ்வலை சஸ்பெண்ட் செய்து ம.ஜ.த., அதிரடி அறிவிப்பு. எஸ்.ஐ.டி., விசாரணைக்கு வரவேற்புl மே 1: எஸ்.ஐ.டி., விசாரணையில் கலந்து கொள்ள தனது வழக்கறிஞர்கள் மூலம் பிரஜ்வல் அவகாசம் கேட்டார். எக்ஸ் பதிவில், 'உண்மை விரைவில் வெல்லும்' என்றார் பிரஜ்வல். பிரஜ்வல் துாதரக பாஸ்போர்டை முடக்கும்படி பிரதமருக்கு முதல்வர் கடிதம்l மே 3: கடந்த 2019 முதல் 2022 வரை பல முறை பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுl மே 4: பெண் கடத்தல் வழக்கு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பல முறை நோட்டீஸ் கொடுத்தும் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 'புளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டதுl மே 7: சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க குமாரசாமி வலியுறுத்தல்l மே 8: ரேவண்ணா சிறையில் அடைப்புl மே 9: வீடியோ வெளியான விவகாரத்தில் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக புகார். இதை அவர் மறுத்தார்.l மே 10: பிரஜ்வல் வீடியோக்களை வெளியிட்டதாக, பா.ஜ.,வின் தேவராஜே கவுடா கைதுl மே 18: பிரஜ்வலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்ததுl மே 23: நாடு திரும்பி எஸ்.ஐ.டி., முன் ஆஜராகும்படி பிரஜ்வலுக்கு அவரது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கைl மே 27: நாடு திரும்பப் போவதாகவும், 31ல் பெங்களூரில் எஸ்.ஐ.டி., முன் ஆஜராவதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ மூலம் அறிவிப்புl மே 31: வெள்ளிக் கிழமை அதிகாலை 1:24 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணா கைது.-- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ