உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் எதிரொலி மஹா., - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து முடங்கியது

தாக்குதல் எதிரொலி மஹா., - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து முடங்கியது

மும்பை,: மஹாராஷ்டிரா - கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தாக்கப்பட்டதை அடுத்து, இரு மாநிலங்கள் இடையிலான பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், மஹாராஷ்டிரா எல்லையில் உள்ளது. இங்கு மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.இங்குள்ள மாரிஹால் என்ற இடத்தில் கடந்த 21ம் தேதி, கர்நாடக அரசு பஸ்சில் தன் ஆண் நண்பருடன் ஏறிய 14 வயது சிறுமி, நடத்துநரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.அதற்கு நடத்துநர், தனக்கு மராத்தி தெரியாது என்றும், கன்னடத்தில் பேசும்படியும் கூறியுள்ளார். இந்த விவகாரம் வாக்குவாதம் ஆகி, நடத்துநரை சிலர் கண்மூடித்தனமாக தாக்கினர்.இந்த தாக்குதல் தொடர்பாக நான்கு பேரை கைது செய்த போலீசார், நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் நடந்த அதே நாள் இரவு, மஹாராஷ்டிர அரசு பஸ் ஒன்று, பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்நாடகாவின் சித்ரதுர்கா என்ற இடத்தில் அந்த பஸ்சை வழிமறித்த* சில கன்னட ஆதரவாளர்கள், பஸ் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சை சூறையாடினர்.ஓட்டுநர் மீது கருப்பு பெயின்ட் ஊற்றியதுடன் அவரை சரமாரியாக தாக்கினர். இதை தொடர்ந்து, கர்நாடக அரசு சொகுசு பேருந்து ஒன்று மஹாராஷ்டிராவில் நேற்று சூறையாடப்பட்டது. இந்த சம்பவங்களால் இரு மாநிலங்களிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால், மஹாராஷ்டிரா செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைத்துள்ளதாக வடமேற்கு கர்நாடகா போக்குவரத்து கழக மூத்த அதிகாரி தெரிவித்தார்.கர்நாடகா செல்லும் அரசு பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மஹாராஷ்டிர போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சார்நாயக் நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பன்மொழி விரும்பி
பிப் 24, 2025 16:09

மும்மொழித் திட்டமெல்லாம் போறாது. ரூவா நோட்டில் இருக்கிற அத்தனை மொழிகளும் படிச்சு பாசாகற திட்டம்.கொண்டாங்க.


ஆரூர் ரங்
பிப் 24, 2025 11:02

மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிந்ததால் வந்த வினை.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 21:13

சரிதான் என்றாலும் பெலகாவி பிரச்னை பழைய பிரச்னை .... கன்னடர்களுக்கு இது தேவைதான் ....


MUTHU
பிப் 24, 2025 09:32

இந்தியர்கள் இந்த மாதிரி ஆக்கங்கெட்ட போராட்டங்களுக்கு தான் லாயக்கு. பிரிட்டிஷ் அரசு நாட்டை சூறையாடிக்கொண்டிருந்த நேரத்தில் கூட அவர்களுக்கு எதிராக போராடாமல் இவ்வாரான போராட்டங்களுக்காய் முக்கியத்துவம் கொடுத்து போராடினர்.


Srprd
பிப் 24, 2025 09:19

Some of these Kann. organizations take to violence at the slightest provocation immediately. They deserve it.


user name
பிப் 24, 2025 08:58

பி ஜே பி அனைத்துத்தரப்பினருக்கும் கேடு


Mohan
பிப் 24, 2025 10:18

அடேய் பெயர் சொல்லக்கூட முடியாத அல்லக்கை ..khangress தான் ட இந்தியாவுக்கே கேடு ...அங்க MUDA கேஸ் திசை திருப்ப இப்பிடி மொழி போர் ..நம்ம விடியல் மாதிரி ..வெக்கமில்லாம முட்டு குடுக்குறே ..


Kasimani Baskaran
பிப் 24, 2025 07:19

இரண்டு மாநிலங்களுக்கு இடையில் மொழிப்பற்று மொழிவெறியாக உருவெடுத்து இருக்கிறது. திராவிடர்களுக்கு தாய் மொழி இல்லை - ஆகவே மொழிவெறி வராது - மாறாக வெறுப்புதான் வரும்.


அப்பாவி
பிப் 24, 2025 06:58

கன்னடா, மராத்தி மொழிகளை தடைசெய்து விட்டு தமிழ் ,இந்தி மட்டுமே பேசணும்னு சொல்லி தேஷ்பக்தியை சளர்க்கலாம்.


KavikumarRam
பிப் 24, 2025 09:48

மொதல்ல உங்க தமிழக குடும்ப ஆட்சில தமிழை ஒழுங்கா துண்டுசீட்டை பார்த்தாவது பேச சொல்லுங்க. ரெண்டு தத்திகளும் துண்டு சீட்டை பார்த்து படிக்கும்போதே கை நடுங்குது, வாய் உளறி பெப்பெபேங்குது.


manu putthiran
பிப் 24, 2025 06:58

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு கேடு..


புதிய வீடியோ