உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷன் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது : சுப்ரீம் கோர்ட்

தேர்தல் கமிஷன் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது : சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உச்ச நீதிமன்றம், தேர்தல்களை கட்டுப்படுத்தும் ஆணையம் அல்ல. அரசியலமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் உத்தரவிட முடியது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லோக்சபாவுக்கு தேர்தல் நடந்து வருகிறது. தற்போது ஒரு தொகுதியில், ஐந்து ஓட்டுச் சாவடிகளில், பதிவாகும் ஓட்டுகள், 'விவிபாட்' எனப்படும் ஓட்டு உறுதி சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.அனைத்து ஓட்டுச் சாவடிகளில் பதிவாகும் ஓட்டு உறுதி சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.நேற்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, சில சந்தேகங்கள் இருப்பதால், தேர்தல் கமிஷனின் உயரதிகாரி ஒருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமர்வு கூறியது. அதன்படி, தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் நிலேஷ் குமார் வியாஸ் நேரில் ஆஜராகி, அமர்வின் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதிலளித்தார்.குறிப்பாக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், விவபாட் இயந்திரம் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை அமர்வு எழுப்பியது.அமர்வின் கேள்விகளுக்கு நிலேஷ் குமார் வியாஸ் அளித்த விளக்கம்:கட்டுப்பாடு பிரிவு, ஓட்டு இயந்திரம் மற்றும் விவிபாட் என, ஓட்டுப் பதிவு இயந்திரம் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவை தயாரிக்கப்படும்போதே, அவற்றில், 'மைக்ரோகன்ட்ரோலர்' என்ற, 'சிப்' பொருத்தப்படும். இவைதான், இந்த இயந்திரங்கள் செயல்படுவதற்கு முக்கியமானவை.இந்த சிப்களில், எந்த நேரத்திலும், யாராலும் எந்த மாற்றமும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, 'உச்ச நீதிமன்றம், தேர்தல்களை கட்டுப்படுத்தும் ஆணையம் அல்ல. அரசியலமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது' என, கூறிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

தகவல் தர மறுப்பு

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, இ.சி.ஐ.எல்., எனப்படும் இந்திய மின்னணு வாரியம் மற்றும் பி.இ.எல்., எனப்படும் பாரத் மின்னணு லிமிடெட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை, வெங்கடேஷ் நாயக் என்ற தன்னார்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.சட்ட விதிவிலக்குகளை சுட்டிககாட்டி, இந்த தகவல்களை அளிக்க அந்த நிறுவனங்கள் மறுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rao
ஏப் 25, 2024 09:44

Atleast now saner counsel prevailed on SC Judges not to interfere in another constitutional body.


Karuna Kuppu
ஏப் 25, 2024 07:47

மக்களின் தலையாய உரிமை வாக்களிப்பது அதை பலத்த ஐயப்பாடுகளை எழுப்பக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு முறையில் நடத்தாமல் எளிமையான வாக்குச்சீட்டு முறையிலேயே ஐயப்பாட்டுக்கு இடமில்லாதவாறு நடத்துவதினால் என்ன குறை? அதுதானே முறை


Kasimani Baskaran
ஏப் 25, 2024 06:44

விட்டால் அதன் ஸ்கீமாட்டிக் உட்பட அனைத்து தகவல்களையும் எங்களிடம் காட்ட வேண்டும் என்று சொல்வார்கள் போல மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய தேர்தல் ஆணையம் பல வித நிபுணர்களை ஒன்றல்ல பல முறை அழைப்பு விடுத்தது அப்பொழுது இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்பொழுது மட்டும் நீதிமன்றத்தை திசை திருப்பும் வகையில் நீதிமன்றத்திலேயே வந்து நிபுணர்கள் போல கேள்வி கேட்பார்கள் தோல்வி பயம் வரும்பொழுதெல்லாம் இது போல நடந்து கொள்வது புதிதல்ல தீம்கா எப்படி தமிழகத்தில் ஜெயித்தது என்று கேள்வி கேட்டால் பதில் வராது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை