உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கங்கையாற்றில் வெள்ளம் அடித்து செல்லப்பட்ட கார்கள்

கங்கையாற்றில் வெள்ளம் அடித்து செல்லப்பட்ட கார்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹரித்வார்: ஹரித்வாரில் ஆற்றுப்படுகையில் நிறுத்தப்பட்ட ஏராளமான கார்கள், கங்கையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார், ஹிந்துக்களின் வழிபாட்டு தலமாக விளங்குகிறது. கங்கையாற்றங்கரையில் அமைந்துள்ள இங்கு யாத்ரீகர்கள், சுற்றுலா பயணியர் என ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக, வாகன நெரிசல் அதிகரித்து காணப்படும்.இங்கு கங்கை ஆற்றின் துணை ஆறான சுகி ஆற்றுப்படுகை எப்போதும் வறண்ட நிலையில் காணப்படுவதால், அங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று கங்கை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, சுகி ஆற்றுப்படுகையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதை, அப்பகுதி மக்கள், தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இது வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களை மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை.இதற்கிடையே, உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூலை 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்கை கரையோரம் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு மாநில அரசு அப்புறப்படுத்தியது. இதேபோல் நீர் நிலைகளுக்கு செல்லும் மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் உத்தரகண்ட் அரசு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.Isaac
ஜூன் 30, 2024 18:38

கங்கையை சுத்தம் செய்ய 20000 கோடி செலவழிக்கப்பட்டது என ஊடக செய்தி


அப்புசாமி
ஜூன் 30, 2024 07:29

ஆற்றிலேயே கார்களை நிறுத்தும்.உ.பி ஸ். நம்ம ஆளுங்களே தேவலாம்னு ஆக்கிட்டாங்க. இந்த வருஷம் கார் விற்பனை புதிய உச்சம் தொடும்.


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 07:09

வரலாறு காணாத மழை என்று சொல்லப்படுகிறது. இதே மழை சென்னையில் பெய்தால் பொது மக்களுக்கு சிக்கல்தான்.


சிரித்திரன்
ஜூன் 30, 2024 12:07

எல்லா மழையுமே வரலாறு காணாத மழைதான். நாளைக்கு பெய்யப் போற மழை எப்பிடி வரலாறு கண்டிருக்க முடியும்? உளறல்களுக்கு அளவே இல்லாம போச்சு.


sankaranarayanan
ஜூன் 30, 2024 05:35

அப்பாடா இனி தலைநகர் தில்லியிலும் தண்ணீர் பஞ்சம் இருக்கவே இருக்காது ஹரியாணாவிடம் மண்டியிட வேண்டாம் உன்ன விரதம் வேண்டாம் அதிஷ்ய் அமைச்சருக்கு உடல் நிலை தேறி விடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை