உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டுறவு வங்கியில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

கூட்டுறவு வங்கியில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

சிக்கபல்லாபூர் : விவசாயிகள் பெயரில், போலி ஆவணம் தயாரித்து 11 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கூட்டுறவு வங்கி மேலாளர் மீது வழக்குப் பதிவாகிஉள்ளது.சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணியில் கோலார்- சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக பணியாற்றியவர் சந்திரசேகர், 54. இவர் விவசாயிகள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து வந்த நிதியை மோசடியாக அபகரித்ததாக இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் சந்திரசேகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து சந்திரசேகர் மீது பிரதாப் என்ற விவசாயி, கடந்த மாதம் 26ம் தேதி, சிந்தாமணி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், விவசாயிகள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி 11 கோடி ரூபாயை சந்திரசேகர் ஆட்டையை போட்டது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ