உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை தாக்கிய எஸ்.ஐ., மீது வழக்கு 

மனைவியை தாக்கிய எஸ்.ஐ., மீது வழக்கு 

பெலகாவி: கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய, எஸ்.ஐ., மீது வழக்கு பதிவாகி உள்ளது.பெலகாவி அருகே மாலமாருதி போலீஸ் நிலைய எஸ்.ஐ., உத்தப்பா கட்டிகர், 38. இவரது மனைவி பிரதிமா, 37. தம்பதிக்கு 2 மகள்கள். பெலகாவி டவுன் ராமதீர்த்த நகரில் வாடகை வீட்டில், மனைவி, மகள்களுடன் வசித்தார். உத்தப்பாவுக்கும், மாலமாருதியின் லட்சுமி, 30 என்ற பெண்ணுக்கும், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததுடன், கோவாவுக்கும் சென்று வந்தனர்.இதுபற்றி சமீபத்தில் பிரதிமாவுக்கு தெரிந்தது. கள்ளத்தொடர்பை கைவிடும்படி கணவரிடம் கூறினார். ஆனால், அவர் கேட்கவில்லை. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சண்டையில் கோபம் அடைந்த உத்தப்பா, பிரதிமாவை மகள்கள் முன்பு தாக்கிவிட்டு தப்பினார். தாக்குதலில் முகத்தில் பலத்த காயம் அடைந்த பிரதிமா, பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்படி, உத்தப்பா மீது மாலமாருதி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை