உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசூத் அசார் மீது கடும் நடவடிக்கை; பாக்.,கிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்

மசூத் அசார் மீது கடும் நடவடிக்கை; பாக்.,கிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.கடந்த 2001ல் நம் பார்லிமென்ட் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008ல் நடந்த மும்பை தாக்குதல் ஆகியவற்றில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.அவரை தேடப்படும் குற்றவாளியாக நம் அரசு அறிவித்தது. இவர், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மறைந்திருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. இதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பகவல்பூர் பகுதியில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் பேசியதாக தகவல் வெளியானது.இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மசூத் அசார், பாகிஸ்தானில் இல்லை என நீண்டகாலமாக அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. ஆனால், அவர் பாகிஸ்தானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மை எனில், இது அந்நாட்டின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும். எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்புள்ளது. அவரை சட்டத்தின் முன் நிறுத்தி, பாகிஸ்தான் அரசு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நிக்கோல்தாம்சன்
டிச 07, 2024 20:56

எப்படிங்க ஒசாமா பிங்ளேடன் மீது நடவடிக்கை எடுத்தார்கள் அப்படியா


J.V. Iyer
டிச 07, 2024 19:09

எல்லைதாண்டி இந்த பயங்கரவாதி மசூத் அசார் மிருகத்தை இஸ்ரேல் ராணுவம் போல செயல்பட்டு ஒழிக்கவேண்டும். அவனுடைய சகாக்கள், நண்பர்கள், உறவினர்கள் இவர்களையும் விட்டுவைக்கக்கூடாது.


INDIAN
டிச 07, 2024 10:34

நண்பர்களே , இந்த மசூத் அஜார் , பாஜக, மெஹபூபா கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டவுடன் மெஹபூபாவால் விடுவிக்கப்பட்டு ஸ்ரீநகர் வீதிகளில் பாக்கிஸ்தான் கொடியோடு ஊர்வலம் நடத்தியவர் , அன்று அமைதிகாத்த பாஜக இன்று தீவிரவாதத்துக்கு காரணமான பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைப்பது வேடிக்கையானது . ஒருவேளை மசூத் அஜாருடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியை பிடிக்கமுடியுமென்றால் மசூத் அசாருடன் கூட்டணிக்கு கூட தயங்கமாட்டார்கள்என்பது மட்டுமல்ல பாரத ரத்னா விருதுகூட கூட வழங்கி கவரவிப்பார்கள் .


Nandakumar Naidu.
டிச 07, 2024 08:34

அது ஒரு நாளும் நடக்காது. பாகிஸ்தானை அடித்தால் தான் அது வழிக்கு வரும். நாம் தான் மத சார்பின்மை என்ற ஒரு ஹிந்து விரோத வார்த்தையை பிடித்துக்கொண்டு நம் நாட்டை படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கிரோம்.


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 07:43

சாண்டில்யன் நம் நாட்டுக்கு வந்து நமது மக்களை கொல்வான். வேடிக்கை பார்க்க வேண்டுமா. உங்கள் வீட்டுக்கு வந்து ஒருவன் அடித்த அடித்தால் வேடிக்கை பார்ப்பீரகளா.


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 07:42

இதைப்பற்றி காங்கிரஸ் திமுகவுக்கு கவலை இல்லை. அதானி யை அரசியல் செய்வார்கள்.


சாண்டில்யன்
டிச 07, 2024 07:10

மோடி அரசுக்கு சொல் சிந்தனை செயல் எல்லாமே பழி தீர்ப்பதில் மட்டுமே இவர்கள் கிருத்துவத்தை விரோதிப்பதில்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 08:39

தீவிரவாத ஒழிப்பை பழிதீர்க்கும் நடவடிக்கை என்கிறார் சாண்டில்யன் .... இவர் போன்றவர்களை ஹிந்துக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும் .... நம்மோடு சேர்த்து இவர்களையும் எல்லையில் நமது வீரர்கள் பாதுகாத்து வருகிறார்கள் .... மூர்க்கத்துக்கு செய்ந்நன்றி என்கிற கோட்பாடே அலர்ஜி ....


Mettai* Tamil
டிச 07, 2024 09:45

தீவிரவாதத்துக்கு எதிராக மோடி அரசுக்கு சொல் சிந்தனை செயல் எல்லாமே இருக்கும் .ஆமாம் தீவிரவாதிகளை பழி தீர்ப்பதில் தவறில்லை ......


Dharmavaan
டிச 07, 2024 10:22

தீமைகளை அழிப்பது சரியே


Dharmavaan
டிச 07, 2024 07:09

இவனை ஏன் இன்னும் போட்டு தள்ளவில்லை மொஸாட் போல .பாக் கை நம்பலாமா


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:35

சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையை இந்தியா எடுத்துச் செல்லவேண்டும் ....


SUBBU,
டிச 07, 2024 05:52

The India where 17,000 soldiers lost their lives saving Bangladesh from its enemy Pakistan is now supposedly an enemy. The India that gave shelter, food, and clothing to 10 million refugees is now supposedly an enemy. The India that provided weapons and trained freedom fighters to protect the country from Pakistani forces is now supposedly an enemy. And the Pakistan that killed 3 million people and raped 200,000 women is now supposedly a friend. The Pakistan that ranks number one in producing terrorists is now supposedly a friend. The Pakistan that has yet to apologize to Bangladesh for the atrocities of 1971 is now supposedly a friendly nation TASLIMA NASREEN.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை