உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க மத்திய அரசு முயற்சிக்கிறது

கெஜ்ரிவாலை தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க மத்திய அரசு முயற்சிக்கிறது

புதுடில்லி, : டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. அரசின் மதுபான கொள்கை, 2021 - 22ல் திருத்தப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமலாக்கத் துறையும் இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக விசாரித்து வருகிறது.அமலாக்கத் துறையால், கடந்த மார்ச் 21ல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஜூன் 26ல் சி.பி.ஐ., வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்கில், ஜூலை 12ம் தேதி ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு, அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.மதுபான ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், ஜாமின் கேட்டும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜாமின் வழங்க மறுத்து, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.சி.பி.ஐ., சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டனர்.அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது:அமலாக்கத் துறை வழக்கில் ஜாமின் கிடைத்த நிலையில், கெஜ்ரிவால் சிறையிலேயே இருக்கும் நோக்கத்துடன், 'இன்சூரன்ஸ்' கைது நடவடிக்கையை சி.பி.ஐ., மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முன்னதாகவே நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை.அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ளதால், அவர் தப்பி ஓட மாட்டார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இவருக்கும் ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இருதரப்பு விவாதங்களுக்குப் பின், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை அமர்வு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thiagarajan Subramanian
செப் 06, 2024 09:24

உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். அவர்கள் தம் வருங்கால சந்ததியினர் இவர்கள் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவன் சந்ததியினருக்கு தண்டனை கொடுத்துவிடுவார் என்று நினைப்பதில்லை, நீதித்துறை தன்னுடைய கண்களை தமிழ்நாட்டின் மீதும் வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


பேசும் தமிழன்
செப் 06, 2024 08:32

7 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல்.... தான் ஏதோ சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆள் என்று இருந்து விட்டு.... இப்போது கைது செய்தவுடன்.... புலம்பி என்ன பயன் ???


N.Purushothaman
செப் 06, 2024 07:35

தொடப்பம் ஊழங்கிற சாக்கடையில விழுந்த மாதிரி இருக்கு .....


Kasimani Baskaran
செப் 06, 2024 05:28

சரித்திரம் காணாத வகையில் கொள்ளையடித்து இன்புற்ற குற்றவாளிகளை வெளியே விட நீதிமன்றம் துடிப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நீதித்துறைதான் இந்தியாவின் சாபக்கேடு என்றால் அது மிகையில்லை.


Iyer
செப் 06, 2024 03:09

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது அவரே அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையை அவர் அவசர அவசரமாக திரும்பப் பெற்றார். அதுவே அவரது குற்றத்தை நிரூபிக்க போதுமானது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை