உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாமுண்டீஸ்வரி கோவில் எங்கள் சொத்து: பிரமோதா தேவி

சாமுண்டீஸ்வரி கோவில் எங்கள் சொத்து: பிரமோதா தேவி

மைசூரு: ''மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் எங்கள் சொத்து. அரசு அனுமதி அளித்தால், நாங்களே கோவிலை நிர்வகிப்போம்,'' என அரச குடும்பத்தின் பிரமோதா தேவி தெரிவித்தார்.மைசூரு அரண்மனையில் நேற்று அவர் அளித்த பேட்டி:சாமுண்டீஸ்வரி கோவில் எங்களின் சொத்து. அரசு அனுமதித்தால் நாங்களே நிர்வகிக்க தயாராக இருக்கிறோம். சாமுண்டி மலை வளர்ச்சி ஆணையம் அமைக்க, அரச குடும்பத்தினரான நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினோம்.சாமுண்டீஸ்வரி கோவில், எங்களின் தனிப்பட்ட சொத்துகளின் பட்டியலில் உள்ளது. இதை நிர்வகிக்க ஆணையம் அமைப்பது சட்டவிரோதம். ஆணையம் பெயரில், அரசு விதிமுறை வகுக்க முடியாது. கோவிலில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே, அரசு தலையிடலாம். தனியார் சொத்து எது என்பது, மாநில அரசுக்கு தெரியும். 2001ல் போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இது முடியும் முன்பே, ஆணையம் அமைப்பது ஏன். அந்த வழக்கு முடியட்டும்.கோவிலை நிர்வகிப்பது கஷ்டமாக உள்ளது என, 1974ல் அரசுக்கு, அரச குடும்பத்தினர் கடிதம் எழுதியது உண்மைதான். அதற்கு பல காரணங்கள் இருந்தன. நிர்வகிக்கும்படி கூறினோமே தவிர, கோவிலையே சொந்தமாக்கி கொள்ளுங்கள் என, கூறவில்லை. இப்போது நாங்கள் நிர்வகிக்க தயாராக இருக்கிறோம்.நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களுக்கு சாதகமாக வந்தால், நாங்கள் நிர்வகிப்போம். எங்கள் முன்னோர் வகுத்த பாதையில், நாங்கள் செல்கிறோம். சாமுண்டி மலையை காப்பாற்ற முயற்சிக்கிறோம். வயநாடு, குடகு போன்று சாமுண்டி மலையும் ஆகி விடக்கூடாது என்பது, எங்களின் நோக்கமாகும்.சமஸ்தானத்தின் தனிப்பட்ட சொத்துகளின் பட்டியலில், சாமுண்டி மலையின் அரண்மனை, நந்தி, சாமுண்டீஸ்வரி, மஹாபலேஸ்வரர் கோவில், தேவிகெரே ஏரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளும் அடங்கும். 1950லேயே சமஸ்தான சொத்துகள் பட்டியலை அளித்திருந்தோம். மத்திய அரசு 1972ல் பிறப்பித்த உத்தரவுபடி, சொத்துகளை நாங்கள் அனுபவிக்கலாம்.எங்களின் தனிப்பட்ட சொத்துகளை தக்க வைத்து கொள்ள, அரசியல் செல்வாக்கை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். எந்த அதிகாரிகளிடமும் செல்வாக்கை காண்பிக்கவில்லை. என் கணவர் நான்கு முறை எம்.பி.,யாக இருந்தவர். அப்போதும் அவர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தவில்லை. இப்போது என் மகன் எம்.பி.,யாக இருக்கிறார். நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajpal
ஆக 14, 2024 17:29

கோயிலை அரச குடும்பம் எடுத்து நடத்தினால் இன்றைய மதவாத அரசியல் சக்திகளிடமிருந்து கோயில் காப்பாற்றப்படும்.


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
ஆக 14, 2024 14:40

After India Got Independence, Samasthaanam Properties are People properties... Mysore Samasthaanam People Properties Must be Mandatorily Run Properly & Sacredly by Karnataka State Government


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
ஆக 14, 2024 14:36

மைசூர் சாமுண்டீஸ்வரி திருக்கோயில் சமஸ்தான சொத்து என்றால் இந்தியா சுதந்திரம் அடையும்போது அது இந்தியாவின் அரசாங்க சொத்து ஆகிவிடும்... மைசூர் சாமுண்டீஸ்வரி திருக்கோயிலை கர்நாடக அரசு சரியாக ஏற்று நடத்த வேண்டும்


Subash BV
ஆக 13, 2024 14:28

Just tip of the iceberg. HINDUS TEMPLES GOT LOOTED BY MUGHSLS LATER BY CALONIELS. NOW AFTER INDEPENDENCE OUR GOVTS POLITICIANS, BEUROCRATES LOOTING. INDI GROUPS TIGHT LIPPED. THEY ARE JUMPING UP AND DOWN WHEN AMENDMENTS BROUGHT TO WAQT BOARD. IS THIS A SECULAR COUNTRY. HINDUS WAKE UP.


Bhaskaran
ஆக 13, 2024 11:50

இன்னுமா காங்கிரஸ் கட்சி அந்த கோவில் சொத்துகளை ஆட்டையை போடாமல் வச்சுருக்கு ஆச்சரியம் தான்


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 10:21

இந்துக்களை ஜாதிவாரியாக பிரித்து வைத்திருப்பது இதற்காக தான், ஒன்று கூடி விட்டால் இந்தியா தாங்காது என்று வந்தேறிகளுக்கு தெரியும். எங்களை போன்று ஒற்றுமையாக இருக்க உங்களால் முடியாது என்பது தான் நிஜம்


sankaranarayanan
ஆக 13, 2024 09:30

ஜாக்கிரதை இல்லையென்றால் எங்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அங்கே வந்து அறிவுரைகள் வழங்கி அரசியலாகிவிடுவார்


R.Natatarajan
ஆக 13, 2024 09:06

எந்த மாநில அரசும் இந்து மத கோவில்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க கூடாது. இந்துக்கள் ஒற்றுமையாக இதற்க்கு எதிர்ப்ப தெரிவிக்க வேண்டும்


chennai sivakumar
ஆக 13, 2024 09:05

எதை ஆட்டயை போட்டால் கணிசமாக தேறும் என்பதில் காங்கிரஸார் அதி புத்தி சாலிகள். வயநாடு சம்பவத்தை வைத்து சாமுண்டி மலையை காப்பாற்றுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி piragu என்ன swaagaa


R.Natatarajan
ஆக 13, 2024 09:03

எந்த மாநில


மேலும் செய்திகள்







புதிய வீடியோ