உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு

அடுத்த மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்கள், கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைகிறது. அரபிக்கடலின் கிழக்கு பகுதியின், கேரளா, கர்நாடக கடலோரத்தில் சுழற்காற்று வீசுவதன் விளைவாக, அடுத்த மூன்று நாட்கள் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிணகன்னடா, ஷிவமொகா, சிக்கமகளூரு, ஹாசன் மாவட்டங்களில், கனமழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகிறது. எனவே ஜூன் 25 வரை, கடலோர மாவட்டங்களில் 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.பெலகாவி, தார்வாட், ஹாவேரி, மைசூரு, சாம்ராஜ்நகரில் மழைக்கு வாய்ப்புள்ளதால், 'மஞ்சள் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சாதாரண அல்லது கன மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை