உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு : 31 மாத இடைவெளிக்கு பின் சட்டசபைக்குள் நுழைந்தார்

சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு : 31 மாத இடைவெளிக்கு பின் சட்டசபைக்குள் நுழைந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: வந்தால் முதல்வராக தான் இந்த சட்டசபைக்கு வருவேன் என சபதமிட்டு சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் சபதத்தை நிறைவேற்றிய உற்சாகத்தில் 31 மாத இடைவெளிக்கு பின் முதல்முறையாக சட்டசபைக்கு வந்தார்.பாராளுமன்ற லோக்சபாவுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 171 இடங்களில் 135 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த 12-ம் தேதி பதவியேற்றார்.முன்னர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது தன்னையும் , தன் குடும்பத்தையும் அப்போதைய ஓய்.எஸ்.ஆர்.காங். கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் அவதூறாக பேசியதால் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது இனி இந்த சபைக்கு வந்தால் முதல்வராகத்தான் நுழைவேன் என சபதமிட்டார்.இன்று (21.06.2024) ஆந்திர சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது, போட்ட சபதத்தை நிறைவேற்றிய உற்சாகத்தில் 31 மாத இடைவெளிக்குபின் சட்டசபைக்குள் முதல்வராக நுழைந்தார். தொடர்ந்து கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ashanmugam
ஜூன் 22, 2024 22:10

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சோப கோடி கொள்ளையடித்த தமிழக சொத்துக்கள் எல்லாம் இன்று நாதியாக கிடக்கின்றன. வாரிசு இல்லாமல் எடுப்பார் கைபிள்ளை போல் பினாமிகள் ஆண்டு அனுபவிக்கின்றனர். இந்த சொத்துக்களை கொள்ளையடிக்காமல் தமிழக ஏழை எளிய பாமர அடிதளத்து மக்களின் வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக செலவழித்திருந்தால், இந்நேரம் தமிழகத்தில் ஏழை என்றே சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் மக்கள் சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள். இதேபோலத்தான் எம்ஜிஆர் 10வருட முதல்வர் ஆட்சியில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் நாதியாக பினாமி வசம் உள்ளது. இதனால், தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடையாது? இதிலிருந்து பார்த்தால் பிள்ளை குட்டிகள் வாரிசு இல்லாத அரசியல் தலைவர்கள் ஏன் லட்சோப கோடி தமிழக மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும்? அதை தமிழக ஏழை எளிய பாமர நடுத்தர அடிதளத்து மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் நீங்கா பேரும் புகழும் பெறலாமே?


ஆரூர் ரங்
ஜூன் 21, 2024 19:57

எம்ஜியார் கூட சட்டசபை செத்து விட்டது எனக்கூறி வெளியேறினார். பின்பு முதல்வராக இறுதி வரை இருந்தார். ஜெ யின் சபதமும் உலகறிந்தது. மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது?


Sivagiri
ஜூன் 21, 2024 19:13

பரவாயில்லை - இவர் பால் வியாபாரி , ஆந்திரா சிஎம் - - ஆனா தமிழ்நாட்டு மந்திரிகள் ? . . சாராய ஆலைகள் அனைத்தும் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி தலைவர்கள் . . .


Sastha Subramanian
ஜூன் 21, 2024 18:58

சபாஷ் நாயுடு . வாழ்த்துகள்


Walter Vadivelu
ஜூன் 21, 2024 18:48

Good person ? தெலுங்கு மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்துள்ளார்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை