உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசா நீட்டிப்புக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கார்த்தி எம்.பி., மீது குற்றப்பத்திரிகை

விசா நீட்டிப்புக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கார்த்தி எம்.பி., மீது குற்றப்பத்திரிகை

புதுடில்லி,:மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது, பஞ்சாபின் மான்சா என்ற இடத்தில், 'தால்வாண்டி சாபோ பவர்' என்ற தனியார் நிறுவனம், மின் உற்பத்தி நிலையத்தை நிறுவி வந்தது. இந்த பணியில் ஈடுபடுவதற்காக, சீனாவைச் சேர்ந்த 263 பணியாளர்கள் பஞ்சாப் வந்தனர்.இவர்களுக்கு அளிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்த நிலையில், அந்த விசாவையே மீண்டும் பயன்படுத்தி பணியை தொடர, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும். இதற்காக, அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி வாயிலாக, விசா மறுபயன்பாட்டுக்கான அனுமதியை சீன பணியாளர்கள் பெற்றனர். இதற்காக, கார்த்திக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கார்த்தியிடம் பல்வேறு முறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.அதில், விசா நீட்டிப்புக்காக, பாஸ்கர் ராமன் வாயிலாக, 50 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கார்த்தியிடம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த பணத்தை, 'அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டன்சி' என்ற, தன் நிறுவனத்தில் கார்த்தி முதலீடு செய்ததாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து கார்த்தி உள்ளிட்டோரை அடுத்த மாதம் 15ல் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஸ்ரீ
மார் 22, 2024 09:27

விட்டால், காசுக்காக


Kasimani Baskaran
மார் 22, 2024 05:44

பல்லாயிரம் கோடிகளில் டீல் செய்து வந்த காங்கிரசுக்கு வந்த சோதனை - லட்சங்களில் உருட்ட வேண்டியிருக்கிறது


Palanisamy Sekar
மார் 22, 2024 03:50

பொதுவாகவே குடிநுழைவு அத்துமீறுவது என்பது பிற நாடுகளில் தேசத்துரோகத்துக்கு சமமாக கருதி தண்டனை கொடுப்பார்கள் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் செய்தது ரொம்ப தப்பான செயலுங்க ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு இது தண்டனைக்கு உரிய குற்றம்தான் அது எங்கே போகணுமா அங்கே சென்ற நிலையில் அவர் மீது தண்டனையை நிறுத்திவைத்து தீர்ப்பை சொல்லிடுவாருங்க அவருநிறுத்தி வைப்பது என்னன்னாஅவர் குற்றவாளி இல்லைங்கோ என்று அர்த்தமாமே


Palanisamy Sekar
மார் 22, 2024 03:46

இப்போ கார்த்திக் சிதம்பரம் என்ன செய்வார்? நீதிமன்றம் போக மாட்டார், மருத்துவ காரணம் பலவற்றை சொல்லி வாய்தா கேட்பார் சிபிஐ தேமேன்னு விழிக்கும் அடுத்த சம்மன் ஆறுமாதங்களுக்கு பின்னர் வழங்கப்படும் அப்போதும் கூட அதே மாதிரி வாய்தா கேட்பார் அதற்குள் விசாரணை நீதிபதி ஓய்வு பெற்று போய்விடுவார் அதன் பின்னர் அந்த வழக்குக்காக வேறு ஒருவரை நியமிக்க இன்னோர் ஆறு மாதகாலம் ஒத்திவைப்பார்கள் செல்வாக்கை வைத்து அப்புறம் இன்னோர் நீதிபதி வருவார்வழக்கின் சாராம்சத்தை இன்னும் படிக்கவில்லை என்று சொல்லி இன்னோர் ஆறுமாதங்கள் நேரம் எடுத்துக்கொள்வார் அதன் பின்னர் விசாரணைக்கு வரச்சொல்வார்கள்போகமாட்டார்மீண்டும் வாய்தாஇப்படியே அடுத்த ஐந்தாண்டுகள் போய்விடும் ஒருவேளை INDI கூட்டணி ஆட்சிக்கு வந்துவிடும் என்று கனவு கொண்டிருப்பார் அப்போதும் மூன்றாவது முறையாக மோடியே ஜெயிப்பார் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்கார்த்திக் சிதம்பரத்தின் குடும்பமே வக்கீல் குடும்பம் எப்படி என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியாததா? ஒருவேளை கைது செய்தால் ப சிதம்பரத்தின் தோஸ்துகள் கண்டன அறிக்கை விடுவார்கள்மேல் மேல் கோர்ட்டுக்கு போவார்கள்ஆட்சிக்கு வாராமல் போனாலும் கூட அந்த INDI கூட்டணி தலைவர் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிடுவார்இதுதாங்க நம்ம நாட்டு நீதி


மேலும் செய்திகள்