உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் கதவின் கண்ணாடியில் சிக்கி குழந்தை பரிதாப பலி

கார் கதவின் கண்ணாடியில் சிக்கி குழந்தை பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பலியா : உத்தர பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஷன் தாக்குர். இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார். அதற்கு பூஜை போடுவதற்காக தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். குடும்பத்தினர் அனைவரும் பூஜையில் பங்கேற்றனர். ரோஷனின் ஒன்றரை வயது குழந்தை ரேயான்ஷ், காரின் உள்ளே அமர்ந்து கொண்டு, கதவு வழியாக தலையை வெளியே நீட்டி, அங்கு சுற்றித் திரிந்த குரங்குகளை வேடிக்கை பார்த்தான். அப்போது காருக்கு திரும்பிய குழந்தையின் தந்தை, இன்ஜினை இயக்கிய போது, திறந்திருந்த கார் கதவின் கண்ணாடி தானாக மேலே உயர்ந்தது. இதில் குழந்தை ரேயான்ஷின் கழுத்து சிக்கி உடனே மயக்க நிலைக்கு சென்றான். குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramu
மார் 12, 2025 08:27

என்ன காரு தயாரிக்குறீங்க. பாதுகாப்பு அம்சம்னா என்னான்னு தெரியாதா. மிகவும் பிரகாசமானLED விளக்கை போட்டு எதிரே வருறவன் கண்ணை குருடாக்குறீங்க. மேதை கட்டும் கூட்டத்திற்கு கமிஷன் வாங்க தான் நேரமிருக்கும். மக்களுக்கு தேவையானதை வரையறை செய்ய நெரமிருக்காது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 12, 2025 14:04

கார்கள் இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்காக பால் வெண்மை நிறத்தில் ஒளிரும் முகப்பு விளக்குகள் தற்போது போது உள்ளது. இந்த மாதிரியான விளக்குகள் எதிரே வரும் வாகன ஓட்டிகள் பார்வையை பாதிக்கிறது. அதிலும் வாகனங்கள் ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி செல்லும் போது எதிரே வரும் வாகன ஓட்டிக்கு பார்வை மிகவும் கடினமாக உள்ளது. அப்பாவி என்று ஹிந்தியில் பெயர் மாற்றிக் கொண்ட நண்பர் சொன்னது போல இந்தியா வாகன துறையில் வேகமாக முன்னேறுகிறது. தமிழக முதலமைச்சர் கூட கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி துவங்க ஆர்வமாக உள்ளார். ஆகவே இதை நண்பர் அப்பாவி அவர்கள் தமிழக முதல்வர் இடத்தில் கூறி குறைந்த பட்சம் தமிழகத்தில் உற்பத்தி செய்யும் கார் நிறுவனங்களிடம் மாற்ற வேண்டும் என்பது என் அவா ஹைன்.


अप्पावी
மார் 12, 2025 07:40

அந்த கார்ல எல்லாமே ஆட்டோமேட்டிக். தானாகவே போட்டுத் தள்ளிரும். இந்தியா வேகமா வளர்ந்து வல்லரசாயிட்டு வருது ஹைன்.


N Annamalai
மார் 12, 2025 05:37

பாவம் குழந்தை .


D.Ambujavalli
மார் 12, 2025 05:36

குழந்தையைத் தனியே விட்டுச்சென்றதே தவறு காரை ஸ்டார்ட் செய்யுமுன் குழந்தை எந்த நிலையில் இருக்கிறது என்று திரும்பிக்கூடப் பார்க்காத அவசரம், அலட்சியத்தால் தன் குழந்தைக்குத் தானே யமனாகிவிட்ட குற்றவுணர்வே அவரை ஆயுளுக்கும் அலைக்கழிக்கும்


முக்கிய வீடியோ