உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேணுகா எல்லம்மா கோவிலில் ரூ.1.96 கோடி காணிக்கை வசூல்

ரேணுகா எல்லம்மா கோவிலில் ரூ.1.96 கோடி காணிக்கை வசூல்

பெலகாவி : பிரசித்தி பெற்ற சவதத்தி ரேணுகா எல்லம்மா கோவில் உண்டியலில், 50 நாட்களில் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை வசூலானது.பெலகாவி சவதத்தியில், ரேணுகா எல்லம்மா கோவில் அமைந்துள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, ரேணுகா எல்லம்மாவை தரிசனம் செய்கின்றனர்.கோவிலின் வருவாயும் அதிகரிக்கிறது. 50 நாட்களுக்கு முன் உண்டியல் எண்ணப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. நேற்று முன்தினம், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இரவு வரை பணிகள் நீடித்தன.உண்டியலில் 1.96 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது. 20.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 4.44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்திருந்தன.'கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, 'சக்தி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உண்டியலில் காணிக்கை தொகை அதிகரிக்க, இதுவே காரணம்' என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை