உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடுக்கி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

இடுக்கி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

மூணாறு: இடுக்கி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஷீபாஜார்ஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இத்தொகுதியில் ஏப்.26ல் தேர்தல் நடந்தது. லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா, கோதமங்கலம், மூவாற்றுபுழா ஆகிய சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகளின் மின்னணு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடுக்கி பைனாவ் அரசு உண்டு உறைவிட பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்க உள்ளது. இந்நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஷீபாஜார்ஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சப் கலெக்டர்கள் அருண் எஸ். நாயர், ஜெயகிருஷ்ணன், வனத்துறை அதிகாரி வருண்டாலியா, தேர்தல் பிரிவு துணை கலெக்டர் அருண் உள்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பள்ளியில் பந்தல், மின்சாரம், வெளிச்சம், தொலை தொடர்பு, குடிநீர், போலீஸ் ஏற்பாடுகள், சுகாதாரம், பாதுகாப்பு அமைப்பு, ஊடக மையம் ஆகிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளும் உரிய நேரத்தில் முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை