உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்லுாரி மேலாளர் கொலை போதை மாணவர் கைது

கல்லுாரி மேலாளர் கொலை போதை மாணவர் கைது

அம்ருதஹள்ளி: போதையில் வந்ததால் கல்லுாரிக்குள் அனுமதிக்காத மேலாளரை கத்தியால் குத்தி கொன்ற மாணவர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.பெங்களூரு, அம்ருதஹள்ளியில் சிந்தி என்ற பெயரில் தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு துாய்மை பணியாளர்கள் பிரிவின் மேலாளராக இருந்தவர் ஜெய் கிஷோர் ராய், 47.இந்நிலையில், நேற்று கல்லுாரி காவலாளிகள் பிரிவின் மேலாளர் பணிக்கு வரவில்லை. இதனால், ஜெய் கிஷோர் ராய்க்கு, காவலாளிகள் பிரிவு மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.நேற்று மதியம் கல்லுாரியின் நுழைவுவாயில் கேட்டில், ஜெய் கிஷோர் ராய் பணியில் இருந்தார்.அப்போது அங்கு வந்த பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவர் பார்கவ், 22 குடிபோதையில் இருந்தார்.இதனால், அவரை கல்லுாரிக்குள் அனுமதிக்க ஜெய் கிஷோர் மறுத்தார். அவரிடம், பார்கவ் வாக்குவாதம் செய்தார். பின் அங்கிருந்து சென்றவர் கடைக்கு சென்று கத்தி வாங்கி வந்து, ஜெய் கிஷோர் ராயின் நெஞ்சில் குத்தினார்.பலத்த கத்தி குத்து காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்ருதஹள்ளி போலீசார், பார்கவை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 04, 2024 05:20

இந்த கல்லூரியில் BA படிப்பிற்கு ஆண்டிற்கு 2 லட்சம் பீஸ் வாங்குறாங்க


K.Muthuraj
ஜூலை 04, 2024 08:46

எதற்கும் ஒரு விலை உண்டு. அரசுக்கல்லூரி என்ன மந்திரத்தில் விளைந்த பணத்திலா செயல்படுகின்றது?. சொல்லப்போனால் நமது வரிப்பணம் பெரும்பாலும் அரசு கல்வி நிலையங்களை நடத்துவதில் தான் வீணடிக்கப்படுகிறது. வாத்தியார் சம்பளம், டிரஸ், சாப்பாடு, புத்தகம், இதுவுமின்றி ஸ்காலர்ஷிப், மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ருபாய், இலவச பஸ். ஊழலில் கட்டப்பட்ட பள்ளி கட்டிட மற்றும் தளவாட செலவுகள். இதையெல்லாம் செயல்படுத்த மந்திரிகளுக்கு ஊழல் பணம். சராசரியாய் பார்த்தல் அரசு கல்விநிறுவனத்தில் படிக்கத்தான் அதிகம் செலவாகும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி