உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் சித்தராமையா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

முதல்வர் சித்தராமையா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதால், முதல்வர் சித்தராமையா, உடுப்பி - சிக்கமகளூரு காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், பா.ஜ., நேற்று புகார் அளித்து உள்ளது.பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதாக, முதல்வர் சித்தராமையா, உடுப்பி - சிக்கமகளூரு காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே மீது, ராஜாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் தலைமையில், பா.ஜ.,வினர் புகார் அளித்தனர்.பின்னர் சுரேஷ்குமார் அளித்த பேட்டி:கர்நாடகாவில் பா.ஜ., 'ஆப்பரேஷன் தாமரை'யை, மீண்டும் துவக்கி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் 50 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசுகின்றனர் என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். லோக்சபா தேர்தல் நேரத்தில், எங்கள் கட்சி மீது, எந்த ஆதாரமும் இல்லாமல், முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறுவது கண்டிக்கத்தக்கது.அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவரது குற்றச்சாட்டால், எங்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உடுப்பி - சிக்கமகளூரு காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே, எங்கள் கட்சி வேட்பாளர் கோட்டா சீனிவாச பூஜாரிக்கு, ஹிந்தி தெரியாது என்று கூறி உள்ளார். மொழி பிரச்னையை முன்வைத்து, எங்கள் வேட்பாளரை வெற்றி பெற விடாமல் தடுக்கும் முயற்சி நடக்கிறது.தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதால், முதல்வர் சித்தராமையா, ஜெயபிரகாஷ் ஹெக்டே மீது, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை