உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தினர் மீது புகார்

சட்டவிரோதமாக குடியிருக்கும் வங்கதேசத்தினர் மீது புகார்

பெங்களூரு: 'பெங்களூரில் முறைகேடாக வசிக்கும் வங்கதேசத்தினரை, அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்' என, போலீசில் ஸ்ரீராம சேனை அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குல் நடத்துவதை கண்டித்து, இந்தியாவில் உள்ள ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், பெங்களூரில் மட்டுமே 150 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதற்கிடையில், 'பெங்களூரில் வங்கதேசத்தினர் முறைகேடாக வசிக்கின்றனர். அவர்களை வெளியேற்ற வேண்டும்' என, ஸ்ரீராம சேனை அமைப்புத் தலைவர் பிரமோத் முத்தாலிக், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவை சந்தித்து நேற்று மனு அளித்தார்.பின், அவர் கூறியதாவது:முறைகேடாக பெங்களூரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் மட்டுமே 4 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். எங்கெங்கு வசிக்கின்றனர் என்ற தகவல், கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்பேட்டையில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முறைகேடாக வசிக்கின்றனர்.வங்கதேசத்தில் ஹிந்துக்கள், ஹிந்து கோவில்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை வங்கதேசத்துக்கு அனுப்பவில்லை என்றால், நாங்களே வெளியேற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
ஆக 14, 2024 12:08

கர்நாடக ஆட்சியாளர்கள் கான் கிராஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் CAA , அனைவருக்குமான பொது சட்டங்களையும் எதிர்ப்பதோடு இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்த அரசியால் வாதிகளை யார் தட்டி கேட்பது?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ