உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முடிவுக்கு வந்தது நன்னடத்தை விதிகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாராளுமன்ற லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்துவது என கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதியை வெளியிட்டது. இதையடுத்து அன்று முதல் நாடு முழுதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.கடந்த ஜூன் 01ம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 04-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. முடிவுகள் வெளியானநிலையில், நாடு முழுதும் அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBBU,MADURAI
ஜூன் 07, 2024 12:45

என்னமோ இத்தனை நாளா இருந்த மாதிரியும் இப்போது அது விலக்கிக் கொள்ள்ளப் பட்டது போலவும் இருக்கு தேர்தல் கமிஷனின் அறிக்கை எது எப்படியோ அடுத்து வருகிற 2026 சட்டசபை தேர்தலுக்குள்ளாவது தமிழக தலைமைத் தேர்தல் ஆனையராக இருக்கும் சத்தியபிரதாசாஹூவை கண்டிப்பாக மாற்ற வேண்டும் அப்போதுதான் தமிழகத்தில் தேர்தல் குறைந்த பட்சமாவது நேர்மையாக நடக்கும்.


கௌதம்
ஜூன் 06, 2024 21:16

ஓஹோ... இனிமேல் நன்னடத்தை எதுவும் இல்லாமல் சுற்றலாமா?


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை