| ADDED : ஆக 03, 2024 11:11 PM
தங்கவயல்: தாழ்த்தப்பட்டோரின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி, தங்கவயல் தனித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வீட்டை முற்றுகையிடப் போவதாக, கோலார் மாவட்ட தலித் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.இதுகுறித்து கோலார் அதன் தலைவர்கள் வெங்கடேஷ், மற்றும் கோடிகானஹள்ளி ராமையா ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:கர்நாடக மாநிலத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கிய பணத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது.இப்பிரச்னை தொடர்பாக தங்கவயல் தனித் தொகுதியில் இருந்து தேர்வான காங்கிரசின் ரூபகலா சட்டசபையில் வாய்திறக்கவில்லை.தங்கவயல் தனித் தொகுதி இடஒதுக்கீடு சலுகையில் சட்டசபைக்குத் தேர்வான ரூபகலா, தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கிய பணத்தை மீட்பதற்காக வலியுறுத்தி பேச வேண்டும். இதற்காகவே அவரது வீட்டை வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.