மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
குடகு, : ''அரசியல் அமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்றாது. காங்கிரஸ் ஊழல் கட்சி,'' என்று, நடிகர் சேத்தன் சாடி உள்ளார்.நடிகரும், சமூக ஆர்வலருமான சேத்தன், குடகு மடிகேரியில் நேற்று அளித்த பேட்டி:மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றும் என்று, காங்கிரஸ் கூறுகிறது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காங்கிரசும் அரசியல் அமைப்புக்கு எதிரான கட்சி தான். பா.ஜ.,வை விட அதிக ஊழல் செய்யும் கட்சி காங்கிரஸ்.மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று, கருத்து கணிப்புகள் கூறி உள்ளன. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பல விஷயங்களில் பா.ஜ., அரசியல் அமைப்புக்கு எதிரானது தான். ஆனால், அரசியல் அமைப்பை மாற்ற மாட்டார்கள். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டிற்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்ட நாகேந்திரா, அமைச்சராக இருக்க வேண்டிய அவசியம் என்ன. இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தால் தவறு இல்லை.ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அரசு வெளியிட வேண்டும். லிங்காயத், ஒக்கலிகர் சமூகத்திற்கு ஆதரவாக, முதல்வர் சித்தராமையா செயல்படுகிறார். எஸ்.சி., - எஸ்.டி., உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த, குழு அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago