உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்: ரோடுஷோவில் அனுராக் தாக்கூர் பேச்சு

வாக்குறுதியை நிறைவேற்றாத காங்கிரஸ்: ரோடுஷோவில் அனுராக் தாக்கூர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹமிர்பூர்: ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் பாஜ., சார்பில் போட்டியிடும் அனுராக் தாக்கூர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் மக்கள் மத்தியில், காங்கிரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 1,500 நிதியுதவி உங்களுக்கு கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பினார்.ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் ஜூன் 1ம் தேதி (7வது கட்டம்) தேர்தல் நடக்க உள்ளது. ஹமிர்பூர் தொகுதி மக்களை சந்தித்து, அனுராக் தாக்கூர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று தனது தொகுதியில் அவர் ரோடு ஷோ நடத்தினார்.

வாக்குறுதி என்னாச்சு?

ரோடு ஷோவில் அனுராக் தாக்கூர் பேசியதாவது: நான் கேட்க விரும்புகிறேன். காங்கிரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 1,500 நிதியுதவி உங்களுக்கு கிடைத்துள்ளதா?. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆட்சி அமைத்த முதல் மாதத்திலேயே பெண்களுக்கு ரூ. 1,500 வழங்குவதாக உறுதியளித்தனர். இப்போது 15 மாதங்கள் கடந்துவிட்டன. காங்கிரஸ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Oviya Vijay
மே 11, 2024 16:26

நீங்க யாருன்னே எங்களுக்கு தெரியாது...


Syed ghouse basha
மே 11, 2024 15:58

வாக்குறுதி நிறை வேற்றாதவர்கள் யார் என்று கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் மோடி பேசியதை மட்டும் திரும்ப கேளுங்க


mugundh
மே 11, 2024 15:52

anga terilayo?


முரளி
மே 11, 2024 15:31

இவரை வேற 1500 கிடைச்சுதான்னு கேள்வி வேற.


முரளி
மே 11, 2024 17:40

பஞ்சிலட்சத்தைப் பத்தி போட மாட்டியே.. ஆப்பு நிச்சயம்.


மேலும் செய்திகள்