மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago
பெங்களூரு: காங்கிரஸ் அரசு செயல்படுத்திய வாக்குறுதி திட்டங்களுக்கு, தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்தது. 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் காங்., ஆட்சிக்கு வந்தது. அரசு அமைந்த சில மாதங்களில், 'சக்தி, கிரஹஜோதி, கிரஹலட்சுமி,அன்னபாக்யா' என நான்கு திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தியது. இன்னும் 'யுவநிதி' எனும் ஒரேயொரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 5 திட்டங்கள்
சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். கிரஹஜோதி திட்டத்தின் கீழ், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. அன்னபாக்யா திட்டத்தில், 5 கிலோ அரிசியும், 5 கிலோ அரிசிக்கான பணமும் வழங்கப்படுகிறது.யுவநிதி திட்டத்தின் கீழ், வேலையில்லா பட்டதாரி இளைஞர் களுக்கு, மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். இத்திட்டம் இன்னும் அமல்படுத்தவில்லை. ஐந்து திட்டங்களுக்கு, 52,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கு பணம் திரட்டுவது, அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அம்பலம்
குறிப்பாக எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு அரசு பயன்படுத்துவதாக, பா.ஜ., குற்றம் சாட்டியது.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மை என்பது, அம்பலத்துக்கு வந்துள்ளது. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு செலவிட்டு உள்ளது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.செலவிடப்பட்ட தொகை விபரம்:l கிரஹலட்சுமி - ரூ. 7,881 கோடிl கிரஹஜோதி - ரூ.2,585.93 கோடிl அன்னபாக்யா - ரூ.2,187 கோடிl சக்தி - ரூ.1,451.45 கோடிஇது தவிர பாக்யலட்சுமி திட்டத்துக்கு 70.28 கோடி ரூபாய் செலவானதாக கணக்கு விபரங்கள் தெரிவிக்கின்றன.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago