உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் இணையும் காங்., மாஜி எம்.எல்.ஏ., 

பா.ஜ.,வில் இணையும் காங்., மாஜி எம்.எல்.ஏ., 

பெங்களூரு, : காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தி, பா.ஜ.,வில் இன்று இணைகிறார்.பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாசமூர்த்தி. கடந்த 2020ல் கே.ஜி.ஹள்ளி கலவரத்தின் போது, இவர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத்ராஜ் மீது குற்றச்சாட்டு கூறினார். இந்நிலையில் லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளரான, மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகண்ட சீனிவாசமூர்த்தியை சந்தித்து பேசினார். அவரிடம் ஆதரவு கேட்டதுடன், பா.ஜ.,வில் இணைய அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அகண்ட சீனிவாசமூர்த்தி, இன்று பா.ஜ.,வில் இணைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி