பா.ஜ.,வை ஹரியானா புறக்கணிக்கும் காங்கிரஸ் எம்.பி., கணிப்பு
புதுடில்லி:“மத்திய பட்ஜெட்டில் ஹரியானா மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்ததைப் போல, சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை ஹரியானா மக்கள் புறக்கணிப்பர்,” என, ரோஹ்தக் தொகுதி காங்கிரஸ் எம்.பி., தீபேந்தர் ஹூடா கூறினார்.காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தீபேந்தர் ஹூடா கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் ஹரியானா மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., சபையில் கேள்வி எழுப்பியதால், மத்திய அமைச்சர் லாலன் சிங் 'நாட்டுக்காக பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள், ஹரியானாவை மட்டும் பார்க்காதீர்கள்' என்றார்.ஹரியானா இந்த நாட்டின் ஒரு மாநிலம் இல்லையா? எங்கள் மாநில வளர்ச்சி குறித்து கோரிக்கை விடுத்தால் அதை மத்திய அரசு ஆட்சேபிக்கிறது. பட்ஜெட்டில் ஹரியானா மாநிலத்தை புறக்கணித்ததை போலவே, அக்டோபர் மாதம் நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை ஹரியானா மக்கள் புறக்கணிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.