உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் காலாவதியாகி விட்டது: ராஜ்நாத் சிங் தாக்கு

காங்கிரஸ் காலாவதியாகி விட்டது: ராஜ்நாத் சிங் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'காங்கிரஸ் காலாவதியாகி விட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே பா.ஜ., அரசியல் செய்கிறது' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: காங்கிரஸ் முற்றிலும் காலாவதியாகிவிட்டது என்று நான் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டது. பா.ஜ., மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்யாது. ஆனால் அது நீதி மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலானது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே பா.ஜ., அரசியல் செய்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தெலுங்கானா மாநிலம் உருவானதற்கான பெருமை பி.ஆர்.எஸ்.,க்கு செல்லக்கூடாது. இது பலரின் தியாகங்களுக்கு கிடைத்த வெற்றி. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balasubramanian
ஏப் 20, 2024 17:20

நாம் ரொம்ப நாட்களாகவே காயலாங்கடை காங்கிரஸ் என்று தான் குறிப்பிட்டு வருகிறோம்! ?


தாமரை மலர்கிறது
ஏப் 19, 2024 20:14

காங்கிரஸ் பத்து இடங்களில் கூட ஜெயிக்காது


P. VENKATESH RAJA
ஏப் 19, 2024 17:36

ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எப்போவே காலாவதியாகிவிட்டது


அப்புசாமி
ஏப் 19, 2024 17:30

காங்குரஸ் ஆளுங்க எல்லாம் பா.ஜ வில் ஐக்கியம்.


முருகன்
ஏப் 19, 2024 16:24

இன்னும் ஒரு ஜந்து வருடம் கழித்து உங்கள் நிலையும் அது தான்


சமீபத்திய செய்தி