உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ்: நட்டா தாக்கு

ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ்: நட்டா தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியா ஜனநாயகத்தின் தாய். அத்தகைய ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா கூறினார்.டில்லியில் நடைபெற்ற ஜனநாயகத்தின் கருப்பு தின விழாவில், நட்டா பேசியதாவது: அவசரநிலையைப் பார்த்தவர்களைச் சந்தித்து, நிலைமை என்ன என்பதை அறிய முயற்சி செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஜனநாயகம் வலுவாக உள்ளது. தேர்தல் என்ற மிகப்பெரிய திருவிழாவை கொண்டாடியுள்ளோம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். அத்தகைய ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தது காங்கிரஸ் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திரா அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி தனது நாற்காலியை காப்பாற்ற முயன்றார். அதன் பிறகு நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த போராட்டத்தை நிறுத்த, இந்திரா ஜூன் 25ம் தேதி 1975ம் ஆண்டு இரவு அவசர நிலையை அறிவித்தார். அதே இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு நட்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

J.Isaac
ஜூன் 25, 2024 17:41

நீங்க நடத்திய சாதனைகளை சொல்ல வேண்டியது தானே. அதற்கு வக்கில்லை. Since you do not have the courage to convince the people


Lion Drsekar
ஜூன் 25, 2024 16:58

அந்த ஒரு கட்சி மட்டும் என்ன பாவம் செய்தது ? சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக இருந்த ஜனநாயகம் தாக்கம் வேறு, சுதந்திரம் பெற்றபின்பு இருக்கக்கூடிய ஜனநாயகம் வேறு. அன்று தியாகிகள் குடும்பம், சொத்து , நகை, பந்தம் எல்லாவற்றையும் துறந்து சிறைக்கு சென்று உயிரை தியாகம் செய்து சுதந்திரம் பெற்று கொடுத்தார்கள், சுதந்திரம் பெற்றபின்பு குடும்பத்துக்காக, பணத்துக்காக, சொத்துக்காக, நகைக்காக நாட்டையே ...? இதில் எல்லோரும் ஒருவரே . சான்றோர் வாக்கு தான் வாழ பிறரைக் கெடுக்காதே, ஆனால் இன்று தான் வாழவேண்டுமானால் பிறரைக் கெடுத்தால்தான் . இதுபோன்று எல்லாமே தலைகீழாக சென்று விட்டது . இன்றைக்கு இருக்கிறோம் பதிவு செய்கிறோம் , நாளைய தலைமுறையை நினைத்து உருகி, ஒவ்வொரு அதுவும் செய்கிறோம் . நல்லது நடந்தால் சரி, வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 15:58

அவசரநிலை அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக பத்திரிக்கை அலுவலகங்களின் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. வழக்கோ விசாரணையோ இன்றி கைதுசெய்யபட்ட அப்பாவிகளின் குடும்பங்களுக்கு எந்தசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. . . இப்போது ஊடக சுதந்திரம், அரசியல் சட்டம், எழுத்துரிமை பற்றிப் பேசும் எதிர்கட்சிகள் பழையதை மறக்கடிக்க முயற்சிக்கின்றன.


J.Isaac
ஜூன் 25, 2024 20:47

செத்த பாம்பை அடிக்கிற கையாளாகதவர்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை