உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களை கல்வியுடன் இணைத்தோம்: பிரதமருக்கு கார்கே பதில்

மக்களை கல்வியுடன் இணைத்தோம்: பிரதமருக்கு கார்கே பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ‛‛ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் என்ன செய்தது என பிரதமர் மோடி கேட்கிறார். நாங்கள் மக்களை கல்வியுடன் இணைத்தோம்'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். மேற்கு வங்க மாநிலம் சுஜாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், மற்றவர்கள் அனைவரும் மிகவும் ஏழைகளாகவும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இன்று நாட்டின் 22 பேரிடம் 70 கோடி மக்களின் சொத்து உள்ளது. ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் என்ன செய்தது என பிரதமர் மோடி கேட்கிறார். அதனால் சில புள்ளி விவரங்கள் தருகிறேன்.

ஜனநாயகம்

1951ம் ஆண்டில், நாட்டில் 18% படித்தவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் 2014ல் இந்த எண்ணிக்கை 74% ஆக உயர்ந்துள்ளது. மக்களை கல்வியுடன் இணைத்தோம். காங்கிரஸ் எப்போதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளது. நேரு ஜனநாயகத்தை வலுப்படுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்?. நமது உரிமைகளுக்காக நாம் நிற்கவில்லை என்றால், ஜனநாயகமும் அரசியலமைப்பும் அழிந்துவிடும்.

சர்வாதிகாரி

மீண்டும் பா.ஜ., ஆட்சி வந்தால் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறுவார். நாட்டில் சகோதரத்துவத்தை அழித்துவிடும். இந்திரா வங்கிகளை தேசியமயமாக்கியபோது, ​​கிராமங்கள் தோறும் அரசு வங்கிகளின் கிளைகளைத் திறந்து ஏழைகளுக்கு கடன் வழங்க பாடுபட்டார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kalaiselvan Periasamy
மே 05, 2024 20:24

காங்கிரஸ் மக்களை கல்வியுடன் இணைத்தார்களா? அப்படி என்றால் ஏன் மக்கள் கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று விளக்கம் அளிப்பாரா ? சுயநலத்திற்க்காக ஒன்று கூடிய இந்தியா கூட்டணியை மக்கள் புரிந்து கொண்டால் சரி யோசியுங்கள்


சிந்தனை
மே 05, 2024 20:03

எந்த கல்வியுடன்? நாட்டை நிரந்தரமாக அடிமையாக வைப்பதற்கு ஏற்ப வெள்ளையன் எழுதிய கல்வித் திட்டத்தை அப்படியே தொடர்ந்த ஜவஹர்லால் நேரு இந்த நாட்டுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்!! இது கல்வி இல்லை, Killவி!!!


குமரி குருவி
மே 05, 2024 19:17

நாட்டை நாசப்படுத்திய நயவஞ்சக கூடாரம் காங்கிரஸ்


Barakat Ali
மே 05, 2024 16:50

தெலங்கானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஜீவன் ரெட்டி இவர் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிடுகிறார் இவர் தனது தொகுதிக்குட்பட்ட ஆர்மூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் இவர் சென்று 'கை' சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார் அப்போது ஒரு பெண், “நான் தாமரை சின்னத்தில் தான் வாக்களிப்பேன்” என்று தைரியமாக கூறியுள்ளார் இதனை கேட்டு ஜீவன் ரெட்டி அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார் உடனே அவர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்தார்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ