உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையாவுக்கு எதிராக சதி 

சித்தராமையாவுக்கு எதிராக சதி 

பெங்களூரு, : முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக மத்திய அரசு சதி செய்வதாக, காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரில் இருந்து மைசூரு வரை பா.ஜ., -- ம.ஜ.த., இணைந்து பாதயாத்திரை நடத்த உள்ளனர். என்ன காரணத்திற்காக, பாதயாத்திரை நடக்க உள்ளது என்று எனக்கு தெரியவில்லை.வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல், 'மூடா' முறைகேடு குறித்து, சட்டசபை கூட்ட தொடரில் முதல்வர் பதில் அளிக்க முயன்றார். ஆனால் அவரைப் பேச விடாமல் எதிர்க்கட்சியினர் நேரத்தை வீணடித்தனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து போராட்டம் நடத்தினர்.ஊழல் செய்த கட்சிகளுக்கு, ஊழல் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை. பா.ஜ., ஊழல் செய்ததால் தான் மாநில மக்கள் காங்கிரசை வெற்றி பெற வைத்தனர். மத்திய அமைச்சர் குமாரசாமி சரியான விவரங்கள் இன்றி அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.முதல்வர் சித்தராமையா, 40 ஆண்டுகள் அரசியலில் உள்ளார். அவர் மீது எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அவருக்கு எதிராக, மத்திய அரசு சதி செய்கிறது. எங்கள் அரசு சிறப்பாக செயல்படுவதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.பா.ஜ., ஆட்சியில் நடந்த 21 ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவோம். கர்நாடகா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ராஜ்யசபா எம்.பி., ஆன நிர்மலா சீதாராமன் கர்நாடகாவின் நலனை மறந்து விட்டார்.ஆந்திரா, பீஹாருக்கு மட்டும் சிறப்பு நிதி கொடுத்துள்ளனர். 2028 வரை எங்கள் அரசு தான் இருக்கும். பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி மக்களுக்கு எடுத்து சொல்வோம். அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Duruvesan
ஜூலை 31, 2024 05:53

போலீஸ் போலீஸ் தூங்குதா? பிஜேபி ஊழல் னு சொல்லும் நீ ஏன் எந்த எங்க எப்போ யாரு செய்தாங்கன்னு sollala


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை