மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago
பெங்களூரு: பெங்களூரில் செடிகள் நடுவதற்கு, எங்கெங்கு இட வசதி உள்ளது என்பதை கண்டறிய, செயற்கைக்கோள் உதவியை மாநகராட்சி நாடுகிறது. பெங்களூரில் செடிகள் நட்டு, வன மயமாக்குவது மாநகராட்சிக்கு, பெரும் சவாலாக உள்ளது. நகர மயமாக்கும் வகையில் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். தற்போது செடிகளை நட்டு பசுமையாக்க, மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது. நகரின் எந்தெந்த சாலை, ஏரி வளாகம், மைதானம், அரசு இடங்கள் காலியாக உள்ளன என, ஆய்வு செய்கிறது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, 'மாபதான்' என்ற திட்டத்தை வகுத்துள்ளது.இது தொடர்பாக, மாநகராட்சி வனப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:செடிகள் நடுவதற்கு எங்கெங்கு இட வசதி உள்ளது என்பதை கண்டறிய, சாட்டிலைட் உதவியுடன் ஆய்வு நடத்தப்படுகிறது. பொம்மனஹள்ளி மண்டலத்தின், எட்டு வார்டுகளில், ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 7,000 செடிகள் நட, இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.மாநகராட்சியின் வனப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்வர். சோதனை சர்வே வெற்றி அடைந்தால், 'மாபதான்' திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்துக்கு மாநகராட்சி ஒரு பைசாவும் செலவிடாது. தனியார் நிறுவனமே செலவிட்டு, சர்வே நடத்தி மாநகராட்சிக்கு அறிக்கை அளிக்கும். இதன் அடிப்படையில் மாநகராட்சி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்.மழைக்காலத்தில், 1.30 கோடி செடிகள் நடுவதற்கு, மாநகராட்சி வனப்பிரிவு திட்டமிட்டுள்ளது. ஆர்.ஆர்.நகர், பொம்மனஹள்ளி மண்டலத்தில், தலா 5 விருக்ஷ வனங்கள் உருவாக்கப்படும். விருக்ஷ வனங்கள் 3,000 முதல் 6,000 சதுர அடி பரப்பளவு இருக்கும். இந்த திட்டத்துக்கு 15வது நிதி ஆயோக் திட்டத்தின் கீழ், 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago