உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தாமதத்தால் செலவு அதிகரிப்பு

மெட்ரோ 2ம் கட்ட பணிகள் தாமதத்தால் செலவு அதிகரிப்பு

பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்ட பணிகள் தாமதமாகிறது. இதன் விளைவாக திட்டத்தின் செலவு அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூரு மெட்ரோ நிறுவனம், முதற்கட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்தது. இரண்டாம் கட்டத்தில், 72 கி.மீ., தொலைவில் மெட்ரோ பணிகளுக்கு, 2014ல் அரசின் ஒப்புதல் கிடைத்தது.அதன்பின் 3 கி.மீ., கூடுதலாக சேர்க்கப்பட்டது. 26,405 கோடி ரூபாய் செலவிலான பணிகள், 2019ல் முடிந்திருக்க வேண்டும்.ஆனால், பணிகள் தாமதமானதால், திட்டத்தின் செலவு 30,695 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.திட்டத்தில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டது, கொரோனா தொற்று பரவியது, பண வீக்கம், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை என, பல்வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பணிகள் தாமதமாவதால், திட்ட செலவு 40,000 கோடி ரூபாயை எட்டியது. கூடுதலாக 10,000 கோடி ரூபாய் தேவை என, மாநில அரசிடம் மெட்ரோ நிறுவனம், வேண்டுகோள் விடுத்துள்ளது.மெட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டாம் கட்ட பணிகள் தாமதமாவதற்கு, பல காரணங்கள் உள்ளன. 2019ல் முடிந்திருக்க வேண்டிய பணிகளை, இதுவரை முடிக்க முடியவில்லை.கொரோனா தொற்றுக்கு பின், பல பிரச்னைகள் ஏற்பட்டதால், காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை.ஆரம்பத்தில் நிலத்தை கையகப்படுத்துவதே, பெரும் பிரச்னையாக இருந்தது. இரண்டாம் கட்ட மெட்ரோ பாதை, கெங்கேரியில் முடிவடைய இருந்தது. இது, செல்லகட்டா வரை விஸ்தரிக்கப்பட்டது.காடுகோடியில் கிழக்கு பகுதியில் மற்றொரு டிப்போவை சேர்த்துள்ளோம். ஏற்கனவே திட்டமிட்டதை விட, கூடுதல் நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே திட்டத்தின் செலவு அதிகரித்துள்ளது. இதை, அரசிடம் கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை