உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோருக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து பெண் குழந்தை கடத்திய தம்பதி கைது 

பெற்றோருக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து பெண் குழந்தை கடத்திய தம்பதி கைது 

ராய்ச்சூர் : ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா பண்டேகுட்டா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ஹம்பம்மா. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.மனைவி, குழந்தையுடன் பெங்களூரில் தங்கி பிரகாஷ் கூலி வேலை செய்கிறார். சில தினங்களுக்கு முன்பு, சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.நேற்று முன்தினம் இரவு ராய்ச்சூரில் இருந்து, உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பிரகாஷ், ஹம்பம்மா இருக்கையின் அருகே ஒரு தம்பதி இருந்தனர்.ரயிலில் ஏறியதில் இருந்து பிரகாஷ் - ஹம்பம்மாவிடம், அந்த தம்பதி பேச்சு கொடுத்தனர். சிறிது நேரம் கழித்து தம்பதி கொடுத்த பிஸ்கட்டை, பிரகாஷும், ஹம்பம்மாவும் சாப்பிட்டு மயக்கம் அடைந்தனர்.இவர்களின் மூன்று வயது பெண் குழந்தையை கடத்திய தம்பதி, ஆந்திராவின் அனந்தபுர் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றனர்.நேற்று காலை 4:00 மணி ரயில் தர்மாவரம் வந்தபோது, பிரகாஷும், ஹம்பம்மாவும் கண்விழித்து பார்த்தனர். குழந்தையும் தம்பதியும் மாயமானது தெரிந்தது. தர்மாவரம் போலீசில் புகார் செய்தனர்.குழந்தையை கடத்திய தம்பதி, தங்கள் அருகே அமர்ந்து பயணம் செய்த, இன்னொருவரிடம், 'எங்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை இல்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது குழந்தையை தத்துக் கொடுத்தால், எங்களுக்கு கூறுங்கள்' என கூறி, தங்களது மொபைல் போன் நம்பரை கொடுத்து இருந்தனர்.'மொபைல் நம்பரை வைத்து டவர் எங்கு உள்ளது?' என போலீசார் ஆய்வு செய்தபோது, ராய்ச்சூரில் இருப்பது காட்டியது. ராய்ச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ராய்ச்சூர் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. விசாரணையில் அந்த தம்பதி கலபுரகியின் ரூபேஷ், 45, குஸ்மா, 42, என்பது தெரிந்தது.தங்களுக்கு குழந்தை இல்லாததால், பிரகாஷ் - ஹம்பம்மா தம்பதி குழந்தையை கடத்தியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ