உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணீஷ் சிசோடியா ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் உத்தரவு

மணீஷ் சிசோடியா ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி:டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை பதில் அளிக்க டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேட்டு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தது.இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, கடந்த அண்டு மார்ச்சில் சிசோடியாவை கைது செய்தது.ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ள மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி சர்மா, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மனைவியை சந்திக்க அனுமதி

சிசோடியா தாக்கல் செய்த இடைக்கால நிவாரணம் கோரும் மனுவில், 'உடல் நலக்குறைவால் அவதிப்படும் தன் மனைவியை வாரம் ஒரு முறை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்,' எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சர்மா, வாரம் ஒரு முறை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்குச் சென்று, மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை