உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா கவர்னராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம்

மஹாராஷ்டிரா கவர்னராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : புதுச்சேரி, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல், ஜார்க்கண்ட் கவர்னராக சந்தோஷ் குமார் கங்வாரும், சத்தீஸ்கர் கவர்னராக ராமன் தேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா கவர்னராக சி.எச்.விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மஹாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் கவர்னராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் கவர்னராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.சிக்கிம் கவர்னராக இருந்த லக் ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு, மணிப்பூர் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.குஜராத் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ABIRAMAN BALASUBRAMANIAN
ஜூலை 28, 2024 16:25

இந்த ஒன்றிய அரசு இருக்கும் வரையில் படித்து/வேலை இல்லாமல் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு வேலை தர மாட்டார்கள் இவர்கள் ஈடும் கட்டளை செய்யும் நபர்கள் தான் இவர்கள் புதிய ஆளுநர் வந்து என்ன செய்வார் என்று பார்ப்போம்....


அப்புசாமி
ஜூலை 28, 2024 12:53

ரிடையராயி ஊட்டுல உக்காந்திருப்பவங்களுக்கு கூட்டு, கூட்டு வேலை. இளைஞர்களுக்கு ஆப்பு.


Iniyan
ஜூலை 28, 2024 03:06

மியுசிக் அக்கா பாவம் சும்மா தேர்தலில் நிற்காமல் இருந்தால் எதோ அப்படியே பிழைப்பை ஒட்டி இருக்கலாம்


Iniyan
ஜூலை 28, 2024 03:03

இவர் எல்லாம் வேஸ்ட்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி