| ADDED : ஜூன் 22, 2024 01:35 AM
சாணக்யபுரி:சாணக்யபுரியில் என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் உருவாக்கிய 2.7 கி.மீ., நீளமுள்ள சைக்கிள் பாதையை துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா திறந்துவைத்தார்.சாணக்யபுரியில் உள்ள அப்பகுதிவாசிகளின் தேவையை கருத்தில் கொண்டு, நேரு பூங்காவின் சுற்றுப்புறத்தில் பிரத்யேக சைக்கிள் பாதையை மாநகராட்சி அமைத்தது. ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு (திட்டமிடல் மற்றும் பொறியியல்) மையத்தின் வழிகாட்டுதலின்படி, 4.56 கோடி ரூபாய் செலவில் இந்த பாதை அமைக்கப்பட்டது.இந்த சைக்கிள் பாதையின் மொத்த நீளம் 2.7 கி.மீ., மற்றும் அகலம் இரண்டு முதல் நான்கு மீட்டர் வரை மாறுபடும்.பல்வேறு வசதிகளுடனும் எச்சரிக்கையுடனும் அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் பாதையை நேற்று முன் தினம் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா திறந்துவைத்தார்.நிகழ்ச்சியில் புதுடில்லி பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் பங்கேற்றார்.