மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
3 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
3 hour(s) ago
பெங்களூரு: ''கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து வரும் 15, 16ல் 'தட்சிண் பாரத் உற்சவ் - 2024' ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என சுற்றுலா துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: ஒரே மேடை
கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணைந்து வரும் 15, 16ல் 'தட்சிண் பாரத் உற்சவ் - 2024' ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்கும் இவ்விழாவுக்கு, தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலா துறை பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு உள்ளனர்இந்த உற்சவத்தில், சுற்றுலா முதலீட்டாளர் சந்திப்புகள், பி2பி எனும் வர்த்தகம் தொடர்பான கூட்டம், பல்வேறு கலாசார நிகழ்வுகள் ஒரே மேடையில் நடக்கின்றன. சுற்றுலா முதலீட்டின் திறனை வெளிப்படுத்தவும், தனியார் துறையினரின் அதிக பங்களிப்பை ஊக்கவும் இவ்விழா நடத்தப்படுகிறது. நினைவு சின்னங்கள்
முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களின் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. நினைவு சின்னங்களை மேம்படுத்த, நினைவு சின்னங்களை தத்தெடுக்கும் திட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 272 நினைவு சின்னங்கள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன.ஹம்பி, பாதாமி, ஐஹோல், பட்டதகல்லு, விஜயபுரா சுற்றுலா வட்டம், மைசூரு, ஸ்ரீரங்கபட்டணா, ஹாசன் ஆகிய இடங்களில் பி.பி.பி., எனும் பொது தனியார் பங்களிப்பின் கீழ், சுற்றுலா துறைக்கு சொந்தமான, 388.4 ஏக்கர் நிலத்தில், 595.84 கோடி ரூபாய் செலவில், சுற்றுலா பயணியருக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.சாகச சுற்றுலாவை மேம்படுத்த, 16 மாவட்டங்களில் பி.பி.பி., மாதிரியில், 18 நீர் தேக்கங்களுக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் உடனிருந்தார்.
3 hour(s) ago
3 hour(s) ago