உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாமனார் ஈஸ்வரப்பாவுக்காக ஓட்டு கேட்கும் மருமகள் ஷாலினி

மாமனார் ஈஸ்வரப்பாவுக்காக ஓட்டு கேட்கும் மருமகள் ஷாலினி

ஷிவமொகா: மாமனார் ஈஸ்வரப்பாவுக்காக, மருமகள் ஷாலினி காந்தேஷ், தொகுதியை சுற்றி வந்து ஓட்டுக் கேட்கிறார்.தன் மகன் காந்தேஷுக்கு, ஹாவேரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., 'சீட்' கிடைக்காததால், கொதித்தெழுந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு எதிராக, சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இவரை ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி, பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.வேட்புமனுவை திரும்பப் பெறும்படி, பா.ஜ.,மேலிடம் உத்தரவிட்டும், பொருட்படுத்தாமல் ராகவேந்திராவை தோற்கடிப்பேன் என்ற உறுதியுடன், ஈஸ்வரப்பா பிரசாரம் செய்கிறார். இவருக்கு ஆதரவாக மருமகள் ஷாலினி காந்தேஷும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மகளிர் தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டுக் கேட்கிறார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:என் மாமனாருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தைரியத்துடன் ஓட்டு சேகரிக்கிறோம். பலரும் ஈஸ்வரப்பாவால் எங்களுக்கு பல உதவிகள் கிடைத்தன. எதை கேட்டாலும் செய்து கொடுப்பார் என, மக்கள் கூறுகின்றனர்.என் மாமனார் ஹிந்துத்வாவாதியாக இருப்பதும், அவருக்கு உதவும். இவருக்கு கிடைத்துள்ள சின்னத்திலும், மக்களுக்கு குழப்பம் இல்லை. என் மாமனார் இப்போதும், பா.ஜ., என் தாயை போன்றது என்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்