உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மான்கள் சரணாலயத்தில் வீசப்பட்ட இறந்த கோழிகள்

மான்கள் சரணாலயத்தில் வீசப்பட்ட இறந்த கோழிகள்

தங்கவயல் : தங்கவயல் 'எச் அண்ட் பி' பிரிவின் அருகில், 100 ஏக்கரில் தைல மரக்காடு உள்ளது. இங்கு, பல வகையான மான்கள், மயில்கள், பாம்புகள், பறவை இனங்கள் பலவும் உள்ளன. இவைகளுக்கு தேவையான தண்ணீர், தீவன வசதிகளை பெமல் நிறுவனத்தினர் மற்றும் வனத்துறையினர் செய்து உள்ளனர்.கோடைக்காலத்தில் தண்ணீர் மற்றும் தீவனத்தை தேடி, சில மான்கள் வெளியேறுவதும் உண்டு. இதனால் சாலை விபத்தில் சிக்குவதும், தெருநாய்களுக்கு விருந்தாவதும் உண்டு.மான்களின் சரணாலய பகுதியில் தான், இறந்து போன 200க்கும் மேற்பட்ட கறிக்கோழிகளை மூட்டையாக கட்டி, கொண்டு வந்து மர்ம நபர்கள் போட்டுள்ளனர். துர்நாற்றம் வீசியதால் பெமல் தொழிலாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்; இதனை வனத்துறை ஊழியர்கள் அகற்றினர். தங்கவயல் பெமல் தொழிற்சாலையின், 'எச் அண்ட் பி' பிரிவின் அருகில், இரண்டு மூட்டைகளில் 200க்கும் மேற்பட்ட இறந்த கோழிகள் கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி