உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க முடிவு

குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க முடிவு

பெங்களூரு: 'மழைநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும்' என, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்ட பெங்களூரில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. நகரில் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 12ம் தேதி வரை நகரில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பெங்களூரில் சிறிதளவு மழை பெய்தாலும் மரங்கள் விழுவதும், போக்குவரத்து பாதிப்படைவதும், மழைநீர் கால்வாய்கள் நிரம்பி, தாழ்வான பகுதிகளின் வீடுகளில் வெள்ளம் புகுந்து, அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது. மழைநீர் கால்வாய்களில் அடைத்துள்ள மண், குப்பையை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.சுத்தம் செய்யப்பட்ட கால்வாய்களில், பொது மக்கள் குப்பையை கொட்டுவதால் மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. இது மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுவதை நிறுத்தவில்லை.எனவே மழைநீர் கால்வாய்களில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டினால், அபராதம் விதிப்பதாக மாநகராட்சி எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை