உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பயிற்சி மைய சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

டில்லி பயிற்சி மைய சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

புதுடில்லி: டில்லியில் பயிற்சி மையத்தில் மழைநீர் தேங்கியதில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதுடில்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் டில்லி ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. . இதனால் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் அதிர்ச்சியில் வெளியேறினர். சிலர் தப்பினர் 10க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். 13 பேர் மீ்ட்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சிமைய உரிமையாளர் உள்பட 5 பேரை கைது போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உண்மை தன்மையை கண்டறிய விசாரணை குழு அமைத்து 30 நாட்களுக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 29, 2024 21:54

விசாரணை செய்வதால் போன உயிர் மீளப்போகிறதா? இல்லை. அஜாக்கிரதையாக அந்த இடத்தில் மழைக்காலத்தில் வகுப்பு நடத்திய உரிமையாளர்களை பிடித்து, சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ