துறை அதிகாரிகளை தெரியவில்லை! முதல்வர் மீது ஆம் ஆத்மி காட்டம்
விக்ரம்நகர்:எந்த துறை அதிகாரிகள் இருக்கின்றனர் என்பது தெரியாமல் கூட்டம் நடத்துவதாக முதல்வர் ரேகா குப்தாவை ஆம் ஆத்மி விமர்சனம் செய்துள்ளது.சாலைகள், போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தியதாக பா.ஜ.,வும் முதல்வரும் தங்கள் 'எக்ஸ்' பக்கத்தில் படத்துடன் தகவலை பகிர்ந்திருந்தனர்.முதல்வர் ஆலோசனை நடத்திய படத்தை தன் 'எக்ஸ்' பக்கத்தில் ஆம் ஆத்மி பகிர்ந்துள்ளது. அந்த படத்தில் இருக்கும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை குறிப்பிட்டு, அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவு:ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது கூட முதல்வருக்கு தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, டில்லி மக்களுக்கு அவர் என்ன பணிகளை செய்வார்? இந்த அரசாங்கம் எப்படி செயல்படும்?முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றதாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.இவ்வாறு அக்கட்சி விமர்சனம் செய்துள்ளது.