உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவி விலக தர்ணா

முதல்வர் பதவி விலக தர்ணா

தங்கவயல் : எஸ்.சி., - எஸ்.டி., நிதியில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி, அம்பேத்கர் யுவ வேதிகே அமைப்பினர் நேற்று தர்ணா நடத்தினர்.ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மினி விதான் சவுதா முன், அதன் தலைவர் ஜெய்பீம் சீனிவாஸ், செயலர் ஸ்ரீநாத் ஆகியோர் தலைமையில் தப்பட்டை, மேளம் கொட்டி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.ஜெய்பீம் சீனிவாஸ் பேசியதாவது:மாநிலத்தில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கிய நிதியில் முறைகேடு செய்துள்ளனர். இதற்காக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும். பேத்தமங்களா, ராம்சாகர், குட்டஹள்ளி ஏரிக்கரைகளை சட்டவிரோதமாக சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேத்தமங்களாவில் கன்னட பவன், அம்பேத்கர் பவன், பிரஸ் பவன் ஏற்படுத்த இடம் வழங்க வேண்டும். இளைஞர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கோரிக்கை மனுவை தாசில்தார் நாகவேணியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ