உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 26வது கடற்படைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்பு

26வது கடற்படைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 26வது கடற்படைத் தளபதியாக இன்று (ஏப்ரல் 30) தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றார்.நம் நாட்டின் முப்படைகளில் ஒன்றான கடற்படையின் தளபதி ஹரிகுமாரின் பதவிக்காலம், இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் 26வது இந்திய கடற்படையின் புதிய தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி, (வயது 60) பதவியேற்றார். இவர், இந்திய கடற்படையில் 1985ல் பணியில் சேர்ந்தார். கடந்த 39 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படையில் பணியாற்றி வரும் தினேஷ் குமார் திரிபாதி, கமாண்டர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, ஐ.என்.எஸ்., வினாஸ் போர்க்கப்பலை திறம்பட கையாண்டுள்ளார்.மேற்கு கடற்படை பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். இவரது சேவையை பாராட்டும் வகையில், அதி வசிஷ்ட சேவா விருது மற்றும் நவ சேனா பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ