உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவியை தூக்கி எறிந்தார் டில்லி காங்., தலைவர்! ஆம் ஆத்மியின் ஊழலால் அதிருப்தி

பதவியை தூக்கி எறிந்தார் டில்லி காங்., தலைவர்! ஆம் ஆத்மியின் ஊழலால் அதிருப்தி

புதுடில்லி: பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் காங்., கூட்டணி வைத்திருப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்வி தனது பதிவியை ராஜினாமா செய்தார். ''டில்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் சேர விருப்பம் இல்லை'' என அரவிந்தர் சிங் லவ்லி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. டில்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o2537rnk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமின்றி, முதல்வர் கெஜ்ரிவால் கூட, ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டில்லி காங்., தலைவர் அரவிந்தர் சிங் லவ்வி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இனியும் தொடர மனமில்லை !

காங்., கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை ஆம்ஆத்மி சுமத்தியது. தற்போது டில்லியில் ஆம்ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டில்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. டில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் டில்லி லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாகவும் காங்., மேலிடத்துடன் மோதல் போக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லி காங்கிரஸ் தலைவராக லவ்லி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Bala
ஏப் 28, 2024 22:07

லவ்லி பிஜேபியில் சேர்வது நல்லது சீக்கியர்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளது


sridhar
ஏப் 28, 2024 21:50

திடீரென்று ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சி என்று உணர்ந்து கொண்டாரா , நம்பும்படியா இல்லை


Indian-இந்தியன்
ஏப் 28, 2024 19:55

நெறியற்ற ஸ்காம்க்ரஸ் மற்றும் ஆப்ப் நம் தேசத்திலிருந்து இந்த காட்சிகளை ஒழித்தே அகவேண்டும்


தமிழ்வேள்
ஏப் 28, 2024 19:52

பப்பு வுக்கு பிடித்த இடம் பட்டாசா மட்டுமே


பேசும் தமிழன்
ஏப் 28, 2024 19:26

பப்பு மற்றும் இத்தாலி போலி காந்தி கும்பல் இருக்கும் வரை.... கான் கிராஸ் கட்சி உருப்படாது..... அவர்களை கட்சியை விட்டு விரட்டினால் மட்டுமே ....கான் கிராஸ் கட்சிக்கு எதிர்காலம் ....இளம் தலைவர் ஒருவரிடம் (உம் - சச்சின் பைலட்) கட்சியை ஒப்படைத்தால் மட்டுமே கட்சி உருப்படும்.....நாட்டுக்கும் நல்ல ஒரு எதிர்கட்சி கிடைக்கும்.


முருகன்
ஏப் 28, 2024 19:06

நாளை இவர் இவரை இயக்கும் கட்சியில் சேருவார்


Gopal,Sendurai
ஏப் 28, 2024 19:28

ஏலே முருகா அறிவாலய அடிமையாகவே இன்னும் எத்தனை வருடங்களுக்கு உழைத்து கொட்டுவாய்?


Suresh
ஏப் 28, 2024 18:53

Go back ...


பேசும் தமிழன்
ஏப் 28, 2024 18:32

அட நீங்கள் வேற.....பதவிக்காக பப்பு கம்பெனி ....பாகிஸ்தான் நாட்டுடன் கூட கூட்டணி வைக்கும் .


s vinayak
ஏப் 28, 2024 17:51

இந்த காரணம் சரியில்லை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கமாட்டார்கள்


G Mahalingam
ஏப் 28, 2024 17:16

ராகுல் ஆட்சிக்கு வந்த பிறகு, ஓரே நிமிடத்தில் என்று வறுமையை ஒழித்து விடுவேன் என்று அவரே சொல்லி உள்ளார் ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி இப்போது ராகுல் ஓரே நிமிடத்தில் வறுமையை ஒழித்து விடுவேன் என்று சொல்கிறார் கோடி மக்கள் தொகை ஒளி பூமியில் விழும் நேரத்தை விட வறுமையை அதற்குள் ஒழித்து விடுவேன் என்று சொல்கிறார் அவர் பைத்தியமா என்று எனக்கு புரியவில்லை அல்லது ஆட்சிக்கு வர முடியாது என்பதனால் சொல்கிறாரா? ஒன்னுமே புரியவில்லை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி