உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு பெற்றோருக்கு டாக்டர் அறிவுரை

குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு பெற்றோருக்கு டாக்டர் அறிவுரை

பெங்களூரு : கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் இதுவரை, ஒன்று முதல் 18 வயதுக்கு உட்பட்ட 2,395 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் இது வரை 9,000 க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், ஒன்று முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் 2,395 பேர் என்று தெரிய வந்துள்ளது. ஜனவரியில் 150 குழந்தைகள் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.பெங்களூரு கே.சி.ஜெனரல் மருத்துவமனை டாக்டர் ரேஷ்மி கூறியதாவது: வீடு, பள்ளிகளின் சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வேண்டும். கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, வீட்டின் ஜன்னல்களில் கொசு வலை பொருத்துங்கள்.நகரில் தொடர் மழையால், வைரல் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. காய்ச்சலுடன், சளி, டெங்குவும் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, டெங்கு அறிகுறியில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு முதலில் லேசான காய்ச்சல் துவங்கும்.பின், அதிகரிக்கும். பெற்றோர் கவனக்குறைவாக இருந்தால் டெங்கு பாதித்த ஒரு வாரத்தில், குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பு, கடுமையான தலைவலி, கை, கால்களில் வலி, மூக்கில் இருந்து சளி வடியும். தற்போது ஒரு வயது குழந்தைகளிடம் கூட, டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி