உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவனின் காலுக்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள்

சிறுவனின் காலுக்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: மஹாராஷ்டிராவில் 9 வயது சிறுவனுக்கு காலில் உள்ள காயத்துக்கு பதிலாக, அவன் பிறப்புறுப்பில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடும் போது காலில் அடிபட்டது. இது காயமாக மாறியதை அடுத்து, அது தொடர்பாக சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டான். காயம்பட்ட காலில் அவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சமீபத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், காலில் மட்டுமின்றி அவனது பிறப்புறுப்பில் உள்ள முன்தோலும் அறுவை சிகிச்சை வாயிலாக நீக்கப்பட்டதை அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், காலுக்கு பதிலாக அவனது பிறப்புறுப்பின் முன்தோலை நீக்கும் 'சர்க்கம்சிஷன்' அறுவை சிகிச்சையை தவறாக செய்த டாக்டர்கள், பின் சுதாரித்து காலில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சையும் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் சூழலில், மருத்துவமனை தரப்பிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை டாக்டர்கள் மறுத்துள்ளனர். இது குறித்து ஷாஹாபூர் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கஜேந்திர பவார் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு காலில் காயம் இருந்தது உண்மை. அதே சமயம் அவனுக்கு பிறப்புறுப்பில் முன்தோல் மூடிய பிரச்னையும் இருந்தது. ''இதனால், இரண்டு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் தெரிவிக்க டாக்டர்கள் மறந்திருக்கலாம் அல்லது அவனது உறவினர்களிடம் தெரிவித்திருக்கலாம். டாக்டர்கள் செய்தது சரியே. ஆனால், அதை சிறுவனின் பெற்றோர் ஏற்க மறுக்கின்றனர்,'' என, தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த சிறுவனின் பெற்றோர், செய்த தவறை மறைக்க டாக்டர்கள் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAJA RAM
ஜூலை 01, 2024 18:45

வழக்கமாக பெற்றோர் அறிந்திராத, முன்தோல் மூடியுள்ள பிரச்சினையை மருத்துவர்கள்தான் பெரும்பாலும் கண்டறிவர். ஒரு அறுவைசிகிச்சை செய்யும்போது அதே மயக்க நிலையில் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை செய்தல் குழந்தைக்கு இன்னொரு அறுவை சிகிச்சை தவிர்க்கலாம். மருத்துவர்கள் மிகப்பெரிய நன்மை செய்துள்ளனர். பெற்றோர் உணர்ந்து நன்றி கூறலாம்


subramanian
ஜூன் 30, 2024 15:08

இதை செய்தவருக்கும் அறுவை சிகிச்சை செய்து விட வேண்டும்.


யோகேஷ்
ஜூன் 30, 2024 08:36

சிறுவனை ஆசீர்வதியும்.


அப்புசாமி
ஜூன் 30, 2024 08:35

காலில் தான் எலும்பு இருக்கும். அங்கே இருக்காதே..


ராஜேஷ்
ஜூன் 30, 2024 08:34

நீட் எழுதி.பாஸ் பண்ணி டாக்டரானவங்களோ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை